search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா அடுத்த மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது
    X

    கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா அடுத்த மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது

    108 வைணவ தலங்களில் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் திருக்கல்யாண திருவிழா அடுத்த மாதம் 6-ந் தேதி தொடங்குகிறது.
    108 வைணவ தலங்களில் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலின் முக்கிய திருவிழாக்களில் திருக்கல்யாண திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழா அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி தொடங்குகிறது.

    தொடர்ந்து 7, 8 ஆகிய தேதிகளில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தினம்தோறும் மேளதாளங்கள் முழங்க கோவிலின் உள், வெளி பிரகாரங்களில் சாமி வீதி உலா நடக்கிறது.



    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 9-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 10.45 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரவள்ளிதாயார், ஆண்டாள், ஸ்ரீதேவி, பூமிதேவி ஆகியோரை கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    மறுநாள் 10-ந் தேதி திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, கோவில் கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×