search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நேற்று சுவாமி கைலாச வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் வீதி உலா வந்த போது எடுத்த படம்.
    X
    நேற்று சுவாமி கைலாச வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் வீதி உலா வந்த போது எடுத்த படம்.

    திருவானைக்காவல் கோவில் பங்குனி தேரோட்டம் நாளை நடக்கிறது

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 6-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 23-ந் தேதி கோவிலின் 3 மற்றும் 4-ம் பிரகாரங்களில் 8 திசைகளிலும் உள்ள கொடிமரங்களில் கிழக்கு திசையில் யானை கொடியும், தென் கிழக்கு திசையில் ஆடு கொடியும், தென் திசையில் எருமை கொடியும், தென் மேற்கு திசையில் பூதக்கொடியும், மேற்கு திசையில் மகர கொடியும், வடமேற்கு திசையில் மான் கொடியும், வடக்கு திசையில் குதிரை கொடியும், வடகிழக்கு திசையில் இடப கொடியும் ஏற்றப்பட்டன.

    இந்த கொடியேற்றத்தை சோமாஸ்கந்தர் அம்பாளுடன் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கண்டருளினர்.

    விழாவின் 2-ம் திருநாள் அன்று சுவாமி, சூரியபிரபை வாகனத்திலும், அம்பாள் சந்திரபிரபை வாகனத்திலும், 3-ம் திருநாளன்று சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் வீதி உலா வந்தனர். 4-ம் திருநாளான நேற்று சுவாமி கைலாச வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.



    5-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) மாலை சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வலம் வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறு கிறது. காலை 5.30 மணிக்கு வடம் பிடித்து தேர் இழுக்கப்படுகிறது. தேரோட்டத்தில் சுவாமி ஒரு பெரிய தேரிலும், அம்பாள் ஒரு பெரிய தேரிலும் தனித்தனியாக எழுந்தருளி ஒன்றன் பின் ஒன்றாக 4-ம் பிரகாரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

    பங்குனி தேர் திருவிழா ஏப்ரல் 2-ந் தேதி நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து மெளனோத்ஸவம், சண்டிகேசுவரர் உற்சவம், சொக்கர் உற்சவமும், ஏப்ரல் 11-ந் தேதி பஞ்சப்பிரகார விழாவும் நடைபெறுகிறது. இதையொட்டி சுவாமி, அம்பாள் வேடமிட்டும், அம்பாள் சுவாமி வேடமிட்டும் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். ஏப்ரல் 13-ந் தேதியுடன் விழா நிறைவடைகிறது.
    Next Story
    ×