search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெரிய அம்மனை வழிபட காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தையும் படத்தில் காணலாம்.
    X
    பெரிய அம்மனை வழிபட காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தையும் படத்தில் காணலாம்.

    ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு

    ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கம்பத்துக்கு பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபாடு நடத்தினார்கள். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களின் குண்டம் திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகிறார்கள். இந்த 3 கோவில்களிலும் கடந்த 18-ந் தேதி கம்பங்கள் நடப்பட்டன. இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பெண்கள் கம்பத்துக்கு புனிதநீரை ஊற்றி அம்மனை வழிபட்டனர்.

    வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்படுவதால் நேற்று பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனை தரிசிப்பதற்காக கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


    ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் நடப்பட்டிருந்த கம்பத்திற்கு பெண்கள் புனித நீர் ஊற்றும் காட்சி


    பெண்கள் தங்களது வீடுகளில் இருந்தும், காவிரிக்கரையில் இருந்தும் தீர்த்தம் எடுத்து வந்து கோவிலில் உள்ள கம்பத்துக்கு ஊற்றினார்கள். காலையில் இருந்தே கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அவர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றினார்கள். விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பெரிய மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரப்ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நேற்று பகலில் பிரப்ரோடு வழியாக இருசக்கர வாகனங்களும், கார்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. பஸ், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் பிரப்ரோட்டில் செல்லாத வகையில் பன்னீர்செல்வம் பூங்காவிலும், சவீதா சிக்னல் பகுதியிலும் திருப்பி விடப்பட்டன விழாவையொட்டி ஈரோடு டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×