search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை 30-ந்தேதி நடக்கிறது
    X

    கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை 30-ந்தேதி நடக்கிறது

    கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை நிறைவேற்ற 1,433 குழந்தைகளின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூக்க நேர்ச்சை வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
    கொல்லங்கோடு வட்டவிளை பத்திரகாளியம்மன் கோவிலில் மீனபரணி தூக்கத்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா வருகிற 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் 4-வது நாளான நேற்று தூக்க நேர்ச்சை பதிவு, மற்றும் தூக்க நேர்ச்சை குலுக்கல் நடந்தது. இதில் நேர்ச்சை நிறைவேற்ற 1,433 குழந்தைகளின் பெயர் பதிவு செய்யப்பட்டது.

    தூக்க நேர்ச்சை வருகிற 30-ந் தேதி நடக்கிறது. ஒரு தூக்க வண்டியில் ஒரே நேரத்தில் 4 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படும். மேலும், 4 அம்மன் தூக்கம், 30 பெயர் தூக்கம் உள்பட 1467 தூக்கம் நிறைவேற்றப்படும்.

    இதற்காக, 1467 தூக்கக்காரர்கள் கோவில் வளாகத்தில் தங்கி இருந்து நோன்பு கடைபிடித்து வருகிறார்கள். இவர்கள் காலை, மாலை நேரங்களில் கடலில் நீராடி முட்டுக்குத்தி நமஸ்காரம் செய்து வருகிறார்கள். விழாவில் வருகிற 29-ந் தேதி தூக்க வண்டியோட்டம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×