search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கீழ அன்பில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் அடுத்த மாதம் 11-ந்தேதி நடக்கிறது
    X

    கீழ அன்பில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் அடுத்த மாதம் 11-ந்தேதி நடக்கிறது

    கீழ அன்பில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் அடுத்த மாதம் 11-ந்தேதி நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான லால்குடி தாலுகா கீழ அன்பில் மாரியம்மன் கோவிலில் மாரியம்மன் சுயம்புவாக அவதரித்து பின்னர் மூலவர் சுதை வடிவிலும் உற்சவர் உலோகத்தாலும் அமைய பெற்று உள்ளது. அம்மன் சீதள பரமேஸ்வரி என்ற பெயரில் அருள் பாலிக்கின்றார். அம்பாள் சமயபுரம் மாரியம்மனின் சகோதரி என்று அழைக்கப்படுவதும் உண்டு.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் முதல் ஞாயிறு முதல் அம்மன் விரதம் இருந்து மாப்பட்டினியாக தினை மாவை ஆகாரமாகவும், பானகம், நீர்மோர், இளநீர் அருந்தி பங்குனி இறுதி செவ்வாய் அன்று விரதம் பூர்த்தி அடைந்து திருத்தேரில் பவனி வருவது சிறப்பாகும். இதனையொட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் கொடி ஏற்றப்படுகிறது.

    9-ந்தேதி இரவு 11 மணிக்கு அம்பாள் குதிரை வாகனத்திலும், 10-ந்தேதி மாலை 6.30 மணிக்கு அம்பாள் கண்ணாடி பல்லக்கிலும் பவனி வருகிறார். 11-ந்தேதி மாலை 4.35 மணி முதல் 5.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×