search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவில் திருவிழா 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவில் திருவிழா 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    கோவை சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவில் திருவிழா நாளைமறுநாள் (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    கோவை சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவில் நிர்வாகக்குழு தலைவர் கே.கே.ராமச்சந்திரன், செயலாளர் கே.விஜயகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கோவை சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி பொற் கோவிலில் 48-வது ஆண்டு திருவிழா நாளைமறுநாள் (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவில் தந்திரி சிவபிரசாத்நம்பூதிரி தலைமை தாங்குகிறார். இந்து சமய இணை ஆணையாளர் ஆ.இளம்பரிதி முன்னிலை வகிக்கிறார்.

    26-ந்தேதி 2-ம் நாள் திருவிழாவையொட்டி காலை யில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு ஐயப்ப சேவா சங்கத்தின் 62-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். 27-ந்தேதி நடைபெறும் 3-ம் நாள் திருவிழாவையொட்டி காலையில் களபாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதி பாஸ்கர் கலந்து கொள் கிறார்.

    28-ந் தேதி 4-ம் நாள் திருவிழா நிகழ்ச்சியில் குருவாயூர் தேவசம்போர்டு தலைவர் என்.பீதாம்பரக் குறுப்பு, வருமானவரித் துறை தலைமை ஆணையாளர் டி.பி.கிருஷ்ணகுமார் ஆகி யோர் கலந்து கொள்கிறார்கள். 29-ந்தேதி 5-ம் நாள் திருவிழா நடைபெறுகிறது. இதில், திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு தலைவர் பிரையார் கோபாலகிருஷ்ணன், பாரதீய ஜனதா கட்சியின் கேரள மாநில பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    30-ந்தேதி 6-ம் நாள் திருவிழாவையொட்டி காலையில் உற்சவபலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பட்டிமன்றம் நடைபெறுகிறது. இதில், கலெக்டர் ஹரிகரன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். 31-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தீபாராதனைக்கு பின்னர் ஐயப்ப சுவாமி அலங்கரிக்கப் பட்ட 3 யானை கள் மற்றும் செண்டைமேளம், பஞ்சவாத்தியம் முழங்க ஆவாரம்பாளையம் ரோட் டில் உள்ள விநாயகர் கோவி லில் இருந்து புறப்பட்டு, வி.கே.கே.மேனன் ரோடு வழியாக கோவிலை அடைந்து பள்ளி மண்டபத்தில் பள்ளி உறங்குவார்.

    1-ந்தேதி ஆறாட்டு விழா, மாலை 5 மணிக்கு அலங்கரிக் கப்பட்ட 5 யானைகளுடன் ரதம், செண்டை வாத்தியம் முழங்க ஐயப்ப சுவாமி நகர்வலம் புறப்பட்டு சின்ன சாமி நாயுடு ரோடு, சத்திரோடு, கிராஸ்கட் ரோடு, 100 அடிரோடு வழியாக ஆராட்டுக்குளம் அடைந்து திருக்கோவிலை வந்தடை கிறார். தொடர்ந்து கொடியிறக் கத்துடன் உற்சவ விழா நிறைவடைகிறது.

    திருவிழா நாட்களில் தினமும் காலையில் யானை வாத்தியத்துடன் சீவேலியும், மாலையில் காட்சி சீவேலியும் நடைபெறும். ஐயப்ப சுவாமியின் சன்னதியில் நிறை பறை சமர்ப்பித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணைத்தலைவர் வி.பி.பிரபாகரன், பொருளா ளர் ஆர்.வேலா யுதம், உற்சவ கமிட்டி பொறுப்பாளர் எம்.பி.கோபாலகிருஷ்ணன், இணைச்செயலாளர் பத்ரசாமி ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×