search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சை காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
    X

    தஞ்சை காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

    தஞ்சை காமாட்சி அம்மன் கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    அம்பிகையின் சக்தி பீடங்கள் பல உள்ளன. அவற்றில் ஜாலந்தரம், காமரூபம், காஞ்சீபுரம் ஆகிய 3 சக்தி பீடங்கள் முக்கியமானவை. இந்த 3 பீடங்களில் தலையானது காஞ்சீபுரத்தில் உள்ள காமகோடி பீடம். இங்கு தோன்றிய காமாட்சியம்மன் தஞ்சை மேலராஜ வீதியில் தனிக்கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி பங்காரு காமாட்சி அம்மன், காமகோடி அம்மன் விமானங்கள், கிழக்கு-மேற்கு ராஜகோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டன. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை யாக சாலை பூஜைகள் தொடங்கின.

    நாளை காலை 5.45 மணி அளவில் 7-ம் கால யாக சாலை பூஜையும், அதைத்தொடர்ந்து 10 மணி அளவில் கோவில் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், 10.30 மணிக்கு மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணி அளவில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக விழாவில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொள்கிறார்கள். விழா ஏற்பாடுகளை குஞ்சிதபாதம் பரம்பரை, கல்யாணராமன், பத்மநாபன், செயல் அலுவலர் சங்கர், கணக்கர் பரணிதரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×