search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாரியம்மன் கோவில்களின் கம்பங்களுக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றிய போது எடுத்த படம்.
    X
    மாரியம்மன் கோவில்களின் கம்பங்களுக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றிய போது எடுத்த படம்.

    பெரிய மாரியம்மன்-வகையறா கோவில்களில் கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபாடு

    ஈரோடு பெரிய மாரியம்மன் மற்றும் அதன் வகையறாவான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர்.
    ஈரோடு பெரிய மாரியம்மன் மற்றும் அதன் வகையறாவான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களின் திருவிழா கடந்த 14-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு 3 கோவில்களிலும் கம்பம் நடப்பட்டது.

    பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றுவதற்காக ஏராளமான பக்தர்கள் நேற்று காலையில் இருந்தே திரண்டனர். பெண்கள் பலர் தங்களது பகுதியில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    பெண்கள் வரிசையில் நிற்பதற்கு வசதியாக கோவிலுக்கு அருகில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தடுப்புகளில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றினார்கள். திருவிழாவையொட்டி பெரிய மாரியம்மன் கோவில் பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.



    புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களிலும் ஏராளமான பெண்கள் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர்.

    வருகிற 28-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், 29-ந் தேதி காலை 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும், 30-ந் தேதி பெரிய மாரியம்மன் கோவிலில் மலர்பல்லக்கில் திருவீதி உலாவும் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் பிடுங்கும் விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது.
    Next Story
    ×