search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாளவாடி மாரியம்மன் கோவிலில் இன்று குண்டம் விழா
    X

    தாளவாடி மாரியம்மன் கோவிலில் இன்று குண்டம் விழா

    தாளவாடி மாரியம்மன் கோவிலில் இன்று குண்டம் விழாவில் கோவில் பூசாரி ஒருவர் மட்டும் தான் குண்டம் இறங்கி தீ மிதிப்பார்.
    ஈரோடு மாவட்டம் கர்நாடக மாநில எல்லையை யொட்டி உள்ள தாளவாடி யில் புகழ்மிக்க மாரியம்மன் கோவில் குண்டம் விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடக்கும்.

    இந்த ஆண்டு குண்டம் விழா தொடங்கி நடந்து வந்தது. 14-ந் தேதி கோவிலில் இருந்து மேள வாத்யங்களுடன் ஆற்றுக்கு சென்று அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 15-ந் தேதி அபிஷேக பூஜைகள் இரவு 9 மணிக்கு அலங்காரத்துடன் அம்மன் மேளதாளவாத் தியங்களுடன் திருவீதி உலா வந்தது.

    இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் குண்டம் விழா நடந்தது. இந்த விழாவில் கோவில் பூசாரி ஒருவர் மட்டும் தான் குண்டம் இறங்கி தீ மிதிப்பார்.

    அதே போல அவர் குண்டம் இறங்கியதும் கூடியிருந்த பக்தர்கள் அம்மா தாயே... மாரியம்மா... என்று பக்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். கோவில் அருகே முஸ்லிம்களின் பள்ளிவாசல் உள்ளது. மாரியம்மன் கோவில் குண்டம் விழாவுக்கு முஸ்லிம்களும் உறுதுணையாக இருந்து வருவது குறிப்பிடத் தக்கது.

    விழாவில் தாளவாடி சத்தியமங்கலம், ஆசனூர் மற்றும் சுற்றுவட்டார மலைப் பகுதி மக்களும் ஏராளமான கர்நாடக மாநில பக்தர்களும் கலந்து கொண்டனர். குண்டம் விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×