search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. முன்னதாக நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் மேளதாளம் முழங்க அம்மன் உருவம் பொறித்த கொடி ஏற்றி வைக்கப்பட்டு திருவிழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    அதையடுத்து மூலவரான மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் கோவில் தக்கார் வேல்முருகன், நிர்வாக அதிகாரி ஞானசேகரன், உலுப்பகுடி கூட்டுறவு பால்பண்ணை தலைவர் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கரந்தமலை கன்னிமார் தீர்த்த குளத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக சந்தன கருப்பு கோவிலை வந்தடைவார்கள்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாரியம்மன் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். அதைத்தொடர்ந்து பக்தர்கள் விரதத்தை தொடங்குவார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வருகிற 14-ந் தேதி நடக்கிறது. அடுத்த நாள் பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும். விழாவையொட்டி சுகாதார பணிகளை நத்தம் பேரூராட்சி நிர்வாகத்தினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் காவல்துறையினரும் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×