search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அப்பத்தாள் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்ததையும், அம்மன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்ததையும் காணலாம்.
    X
    அப்பத்தாள் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்ததையும், அம்மன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்ததையும் காணலாம்.

    சுயம்பு அப்பத்தாள் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

    ஈரோடு அருகே வடமுகம் வெள்ளோடு புங்கம்பாடியில் பிரசித்தி பெற்ற சுயம்பு அப்பத்தாள் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
    ஈரோடு அருகே வடமுகம் வெள்ளோடு புங்கம்பாடியில் பிரசித்தி பெற்ற சுயம்பு அப்பத்தாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த 24-ந் தேதி தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு பல்லயம் பிரித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிலையில் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு திருக்காவடி விளக்கு ஏற்றப்பட்டது. பின்னர் சுயம்பு அப்பத்தாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து முக்கிய வீதிகள் வழியாக உற்சவ அம்மன் வீதிஉலா வந்தது.

    விழாவையொட்டி கோவில் வளாக பகுதியில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

    அம்மனுக்கு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விழாவில் ஈரோடு மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுயம்பு அப்பத்தாளை தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×