search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கண்ணாடி பாதுகாப்பு அமைக்கப்பட உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தேரை படத்தில் காணலாம்.
    X
    கண்ணாடி பாதுகாப்பு அமைக்கப்பட உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தேரை படத்தில் காணலாம்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தேருக்கு கண்ணாடி பாதுகாப்பு வளையம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தேருக்கு ரூ.11¼ லட்சம் செலவில் கண்ணாடி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட உள்ளது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் பிரதான தேர், கோவில் வாசல் முன்பு நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த தேரை அரிச்சந்திர மகாராஜா கோவிலுக்கு வழங்கியதாக செவிவழி செய்தி கூறுகிறது. ஓவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழாவின் 14-வது நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க 3 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள கிரிவலப்பாதையில் தேர் வலம் வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். நீதியை நிலை நாட்டுவதை குறிக்கும் விதமாக ஆறுமுகப்பெருமான் தன் திருக்கரத்தில் தராசுடன் அருள்பாலிக்க கூடிய அற்புத சிற்பங்கள் உள்பட பல்வேறு கலைநயம் மிகுந்த சிற்பங்கள் இந்த தேரில் உள்ளன.

    இத்தகைய பழம் பெருமை வாய்ந்த தேரை வடம் பிடிப்பதற்காக திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள 38 கிராம ஊராட்சிகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள், நாட்டாண்மைகாரர்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கப்படுவதும் பாரம்பரிய பழக்க வழக்கமாக தொன்று தொட்டு வருகிறது.

    தற்போது நவீன காலத்திற்கு ஏற்ப கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக தேரில் ஹைட்ராலிக்பிரேக் பொருத்தப்பட்டு தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த வருடம் தேர் முழுவதுமாக மராமத்து பணி நடைபெற்று, புதிய சட்டங்கள் தேரில் பொருத்தப்பட்டன. பல நூற்றாண்டுகளுக்கு பின்பு முதன்முறையாக நடைபெற்ற தேர் மராமத்து பணியின் போது, கெமிக்கல் வாசிங் மூலம் சிற்பங்கள் சுத்தம் செய்யப்பட்டு பழமை மாறாத கலைநுட்பத்துடன் உள்ளன.

    அதைத்தொடர்ந்து தேரின் பாதுகாப்பு கருதி, அதைச்சுற்றியும் கண்ணாடி (அகர்லிக்சீட்) பாதுகாப்பு வளையம் பொருத்தப்பட உள்ளது. அதாவது இந்த ஆண்டிற்கான தேரோட்டம் சில நாட்களில் நடைபெற உள்ளதால், அந்த நிகழ்ச்சி முடிந்ததும், இந்தப் பணி தொடங்குகிறது. இதற்காக கோவில் பொதுநிதியில் இருந்து ரூ. 11லட்சத்து 30ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க தேரை சுற்றி தகரத்தால் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது அதை மாற்றி, தீப்பிடிக்காத, இரவு, பகல் எந்த நேரமும் பக்தர்கள், தேரின் அழகை ரசிக்க கூடிய வகையில் (அகர்லிக்சீட்) கண்ணாடி பாதுகாப்பு வளையம் பொருத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×