search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா 1-ந்தேதி தொடங்குகிறது
    X

    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா 1-ந்தேதி தொடங்குகிறது

    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது.
    பாவூர்சத்திரம் காமராஜ்நகரில் வென்னிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் நடைபெறுகிறது.

    முதல்நாள் திருவிழா காமராஜ்நகர் பொது மக்கள் சார்பில் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 5.15 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வருகின்றனர். பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால பூஜை நடைபெறுகிறது.

    மதியம் முதல் மாலை வரை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கின்றன.

    மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் 1,008 திருவிளக்கு பூஜை நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.

    விழா நாட்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள், நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    Next Story
    ×