search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உலகம் முழுவதும் சிவ வழிபாடு
    X

    உலகம் முழுவதும் சிவ வழிபாடு

    சிவலிங்கம் வழிபாடு உலகெங்கிலும் பரவி ஈஸ்வர தத்துவம் மக்களைக் காக்கும் என்று சொல்லி உள்ளதை பல்வேறு உலக ஏடுகளில் காணலாம்.
    வரலாற்று அறிஞரான சர்ஜான் மார்ஷல் தனது நூலில் சிந்து சமவெளி எங்கிலும் சிவக்குறிப்புகள் உள்ளதாகவும் தற்போதுள்ள மத வழிபாட்டுக் குறிப்புகளே அச்சமயத்திலும் கடை பிடிக்கப்பட்டன என்கிறார்.

    ‘எணான்’ என்னும் கடவுன் எண் குணம் கொண்ட சிவன் தான் என்று உறுதிபடக் கூறுவார் ஈராஸ் பாதிரியார். அமெரிக்காவில் கொலராடோ ஆற்றுக்கரையில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவலாயம் இருந்ததாக தொல்லியர்கள் சொல்கின்றனர்.

    ஆசியாவில் சிவாஸ் என்ற நகரில் சிவ வழிபாடும் இருந்து வந்ததை அறிய முடிகிறது. பிலிப்பைன்ஸ் நகர மக்கள் சிவபெருமானை சிவப்பன் என்று வணங்கி வருகின்றனர்.



    ஜப்பானியர்களது புராதனமான கடவுள் ‘சிவோ’ என்று அவர்களின் ஏடுகளில் தகவல் உள்ளது. பாபிலோனியர்களது செப்பேடுகளில் சிவன் என்ற வார்த்தை ஒரு மாதத்தினுடைய பெயராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கேடியாவின் மக்கள் சிவன் ஒரு நட்சத்திரம் என்று குறிப்பிடுகின்றனர்.

    பின்லாந்து மக்கள் இந்த உலகத்தின் காவல் தெய்வம் சிவனே என்கின்றனர். தொல்லியல் மற்றும் புதைபொருள் ஆராய்ச்சியின் மூலம் கொரியாவில் தெருவுக்கு ஒரு சிவலிங்கம் இருந்துள்ளதை அறியலாம். பாலித்தீவுகள், இலங்கை, இந்தோனேசியா எங்கிலும் சைவ வழிபாட்டை காண முடிகிறது. எகிப்து ஆற்றங்கரையில் ஆயிரம் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    கி.பி. 11-ம் நூற் றாண்டில் தஞ்சையை ஆட்சி செய்து வந்த கண்டராதித்த சோழனின் மனைவி தன் கணவரையே அலங்கரித்து பரமேஸ்வரனாக வழிபட்டதாக பழையாறை - கல்வெட்டும் செய்தியில் இருக்கிறது.

    சயாம் நாட்டு மன்னரின் முடிசூட்டு விழா நிகழ்ச்சிகளில் பாலி எழுத்துகளில் எழுதிய திருவெம்பாவை படிக்கப்பட்டது. இவ்வாறு சிவலிங்கம் வழிபாடு உலகெங்கிலும் பரவி ஈஸ்வர தத்துவம் மக்களைக் காக்கும் என்று சொல்லி உள்ளதை பல்வேறு உலக ஏடுகளில் காணலாம்.
    Next Story
    ×