search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மீனாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா 24-ந்தேதி தொடங்குகிறது
    X

    மீனாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா 24-ந்தேதி தொடங்குகிறது

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 24-ந் தேதி சிவராத்திரி விழா தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாதந்தோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாக்களில் சிவராத்திரி விழாவும் ஒன்று. இவ்விழா வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. இது குறித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி வருகிற 24-ந் தேதி நள்ளிரவு முதல் சுவாமி, அம்மனுக்கு விடிய விடிய அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற உள்ளது.

    எனவே பொதுமக்கள் அபிஷேகத்துக்குரிய பால், தயிர், இளநீர், தேன், நெய், பன்னீர், பழவகைகள், மஞ்சள்பொடி, எண்ணெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை 24-ந்தேதி பகலில் கோவில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம்.

    அன்றையதினம் விடிய விடிய பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    இதேபோல் இம் மையில் நன்மை தருவார் திருக்கோவில், தெப்பக் குளம் முக்தீஸ்வரர் திருக் கோவில், செல்லூர் திருவாப்புடையார் திருக் கோவில், திருவாதவூர் சிவன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இவ்விழாவை முன்னிட்டு ஆன்மீக நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத் தப்பட இருக்கிறது.

    Next Story
    ×