search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தங்களின் சிறப்பு
    X

    ராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தங்களின் சிறப்பு

    ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் சுவாமி தரிசனத்தை விடவும், அங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவதுதான் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் சுவாமி தரிசனத்தை விடவும், அங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவதுதான் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும், வெளியே 22 தீர்த்தங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாக அமைந்தவை.

    அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் ராமேஸ்வரம் சமுத்திரக்கரையில் தான் தீர்த்தமாடுவதைத் தொடங்க வேண்டும். பின்னர் ஆலயத்தில் உள்ள மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.

    கோவிலுக்குள் உள்ள தீர்த்தங்கள் விவரம் வருமாறு. மகாலட்சுமி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம், சேதுமாதவ தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனை தீர்த்தம், கயா தீர்த்தம், சர்வ தீர்த்தம், சிவ தீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், கோடி தீர்த்தம்.
    Next Story
    ×