search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிந்தை மகிழும் சிவ தரிசனம்
    X

    சிந்தை மகிழும் சிவ தரிசனம்

    பல்வேறு ஸ்தலங்களில் உள்ள சிவபெருமானிள் வித்தியாசமான உருவங்களையும், வழிபாட்டு முறைகளையும் கீழே விரிவாக பார்க்கலாம்.
    * மன்னார்குடி அருகில் உள்ள ‘திருராமேஸ்வரம்’ என்ற தலத்தில் ராமபிரான் பூஜித்த ராமலிங்கத்தையும், சீதை பூஜித்த சீதேஸ்வரரையும் தரிசனம் செய்யலாம்.

    *  திருவானைக்காவலில் ஸ்ரீராமர் தீர்த்தம் அமைத்து நிறுவிய சிவலிங்கம் விஷ்ணுவேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.

    *  திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சயனக் கோலத்தில் இருக்கும் கோவிந்தராஜரை அருகில் சந்நிதி கொண்டிருக்கும் சிவலிங்க மூர்த்தியைப் பூஜை செய்யும் நிலையில் தரிசனம் செய்யலாம்.

    *  காஞ்சிபுரம் அருகேயுள்ள ‘தாமல்’ எனும் கிராமத்தில் வராகமூர்த்தி பூஜித்த சிவன் வராகேஸ்வரர் எனும் பெயரிலும், நரசிம்மர் வழிபட்ட ஈசன் நரசிம்மேஸ்வரர் எனும் பெயரிலும் அருள்புரிகின்றனர்.

    *  சூரியனார் கோயிலில் சிவராத்திரியன்று சூரிய பகவானுக்கு நான்கு காலமும் அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறுகின்றன.

    *  காஞ்சிபுரத்தில் திருமால் மீனாக மாறி சிவபெருமானை பூஜை செய்ததால், ஈசனுக்கு ‘மச்சேஸ்வரர்’ என்று பெயர்.

    *  காஞ்சிபுரம்  கச்சபேஸ்வரர் கோயிலில் சிவனை திருமால் ஆமை வடிவில் வழிபட்டதால், அப்பெயர் வந்தது.
    Next Story
    ×