search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகிமை மிகு மகாமகம் நீராடல்
    X

    மகிமை மிகு மகாமகம் நீராடல்

    ஒவ்வொரு வருடமும் வரும் மாசி மகம் விசேஷமானதுதான். இருப்பினும் பன்னிரண்டு வருடத்துக்கு ஒருமுறை வரும் மகாமகம் அதி விசேஷமானது.
    ஒவ்வொரு வருடமும் வரும் மாசி மகம் விசேஷமானதுதான். இருப்பினும் பன்னிரண்டு வருடத்துக்கு ஒருமுறை வரும் மகாமகம் அதி விசேஷமானது.

    ஜோதிட ரீதியாக: கும்ப ராசியில் சூரியன் இருக்கும்போது, மக நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் தினம் பெளர்ணமி வரும். இந்தக் கும்ப மாத பெளர்ணமி திருநாளே மாசிமகம். ஆனால் கும்ப ராசியில் சூரியன் இருக்க, சிம்மத்தில் சந்திரனுடன் குருபகவானும் இணைந்து திகழும் நாள் மகாமகம் ஆகும். இந்த நிகழ்வு பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறையே நிகழும். குருவின் ராசிச் சக்கர சஞ்சாரம் சுமார் 12 வருட காலம்.

    ஆதலால், மாசி பெளர்ணமியில் குரு சிம்மத்தில் வரவேண்டுமானால், அதற்கு பன்னிரண்டு வருடங்கள் பிடிக்கும். ஆக, மகாமகமும் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறையே வரும். சில தருணங்களில் 11 வருடங்களிலேயே மகாமகம் வருவது உண்டு. அதை இளைய மாமாமங்கம் என்பார்கள்

    இத்தகு புண்ணிய தினத்தில் நவகன்னிகா நதிகளும் மகாமக தீர்த்தத்தில் சங்கமிப்பதாகவும், பிரம்மாதி தேவர்கள் கும்பகோணத்தில் கூடுவதாகவும் புராணங்கள் சொல்கின்றன. ஆகவே, இத்திருநாளில் குடந்தை தரிசனமும், மகாமக தீர்த்த நீராடலும் மகத்துவம் வாய்ந்தது.

    பொதுவாகவே, அமாவாசை, பெளர்ணமி, மாதப் பிறப்பு, சிவராத்திரி, மாசி மகம் ஆகிய  நாட்கள் புனித நீராடலுக்கான புண்ணிய காலங்கள். அதேபோன்று, மாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராடலுக்கு உகந்ததே, பிரம்மோத்ஸவத்தின் 10 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் நீராடுவதும் சிறப்புதான்.
    Next Story
    ×