search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாமிதோப்பு ஐயா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா 20-ந் தேதி தொடங்குகிறது
    X

    சாமிதோப்பு ஐயா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா 20-ந் தேதி தொடங்குகிறது

    சாமிதோப்பு ஐயா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது.
    சாமிதோப்பில் ஐயா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தைத்திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    தொடக்க நாளான 20-ந் தேதி காலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு திருநடை திறப்பும், 5.30 மணிக்கு ஐயாவிற்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து கொடி பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. காலை 6 மணிக்கு திருக்கொடியேற்றம் நடைபெறும். பின்னர் நண்பகல் 12 மணிக்கு வடக்குவாசலில் அன்னதானம் நடக்கிறது. அன்று இரவு ஐயா தொட்டில் வாகனத்தில் தெரு வீதிவலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருவிழாவின் 2-வது நாள் இரவு ஐயா வைகுண்டசாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 3-ம் நாள் இரவு வெள்ளைச்சாற்றி அன்ன வாகனத்திலும், 4-ம் நாள் இரவு பூஞ்சப்பர வாகனத்திலும், 5-ம் நாள் பச்சை சாற்றி சப்பர வாகனத்திலும், 6-ம் நாள் சர்ப வாகனத்திலும், 7-ம் நாள் கருட வாகனத்திலும் வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    வருகிற 27-ந் தேதி எட்டாம் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு ஐயா வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி முத்திரி கிணற்றங்கரையில் நடைபெறுகிறது. பின்னர் சுற்றுப்பகுதியிலுள்ள கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் வைகுண்டசாமி சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ம் நாள் திருவிழாவன்று இரவு அனுமன் வாகனப் பவனியும், 10-ம் நாள் இரவு இந்திர வாகன பவனியும் நடைபெறும்.

    வருகிற 30-ந் தேதி 11-ந் திருவிழா நடைபெறுகிறது. அன்று மதியம் 11 மணிக்கு ஐயா பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளி நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு ஐயா ரிஷப வாகனத்தில் தெருவை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை நேரங்களில் பணிவிடையும் உச்சிப்படிப்பு, உகப்படிப்பும், இரவு வாகனப்பவனியும் அன்னதானமும் நடக்கிறது. கலையரங்கத்தில் ஐயாவழி சமய மாநாடு, இன்னிசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும்.

    Next Story
    ×