search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வள்ளியூர் சாமியார் பொத்தை முத்துகிருஷ்ணசுவாமி குருபூஜை கிரிவல தேரோட்டம் நேற்று நடந்த போது எடுத்த படம்.
    X
    வள்ளியூர் சாமியார் பொத்தை முத்துகிருஷ்ணசுவாமி குருபூஜை கிரிவல தேரோட்டம் நேற்று நடந்த போது எடுத்த படம்.

    முத்துகிருஷ்ணசுவாமி குருபூஜை விழா: வள்ளியூரில் கிரிவல தேரோட்டம்

    வள்ளியூர் சாமியார் பொத்தை முத்துகிருஷ்ணசுவாமி குருபூஜை விழாவையொட்டி கிரிவல தேரோட்டம் நேற்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    வள்ளியூர் சாமியார் பொத்தை ஸ்ரீபுரம் முத்துகிருஷ்ணசுவாமி குருபூஜை மற்றும் குரு ஜெயந்தி விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    7-ம் நாள் திருவிழாவான நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கிரிவல தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சூட்டுபொத்தை மலை அடிவாரம் வனவிநாயகர் சன்னதி முன்பிருந்து கிரிவல தேரோட்டம் தொடங்கியது.

    காலை 5.30 மணிக்கு தேரில் முத்துகிருஷ்ணசுவாமி எழுந்தருளியதும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சூட்டு பொத்தையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள 5 கிலோ மீட்டர் தூர கிரிவல பாதையில் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது.

    தேருக்கு முன்னால் மாணவ- மாணவிகளின் பரத நாட்டியமும், ஆடல் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. மாலையில் முத்துகிருஷ்ணா சித்திர கூடத்தில் இசை நிகழ்ச்சி நடந்தது.

    இன்று (சனிக்கிழமை) குருபூஜை விழாவும், வருகிற 12-ந் தேதி குரு ஜெயந்தி விழாவும் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனையும், மதியம் அன்னதானமும், மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகளும், பஜனையும் நடைபெறுகிறது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

    ஏற்பாடுகளை மாதாஜி வித்தம்மா தலைமையில், முத்து கிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×