search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை இன்று நடக்கிறது
    X

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை இன்று நடக்கிறது

    குமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை இன்று நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இங்கு வலியபடுக்கை பூஜை இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 9.30 மணிக்கு புதிய கொடிமரம் பிரதிஷ்டை, மதியம் 1 மணிக்கு உச்சபூஜை, அன்னதானம் போன்றவை நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, 10 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல், நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை பூஜை போன்றவை நடைபெறுகிறது. இந்த பூஜை மாசிக்கொடை விழாவின் 6-வது நாளிலும், பங்குனி மாத பரணி கொடை விழாவிலும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்றும் நடைபெறும். இந்த பூஜையில் அம்மனுக்கு பலவகையான உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள்.
    Next Story
    ×