search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஐயப்பனுக்கு மாலை அணிந்தவர்கள் பின்பற்ற வேண்டியவை
    X

    ஐயப்பனுக்கு மாலை அணிந்தவர்கள் பின்பற்ற வேண்டியவை

    சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கீழே விரிவாக பார்க்கலாம்.
    1. காலை, மாலை இருவேளையிலும் குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை மனதார நினைத்து வழிபட வேண்டும்.

    2. கருப்பு, நீலம், காவி ஆகிய நிற வேட்டிகளையும், சட்டைகளையும் அணிய வேண்டும்.

    3. மாலை அணிந்துகொள்ளும் பக்தர்கள் மிக முக்கியமாக பிரம்மச்சரிய விரதம் இருக்க வேண்டும்.

    4. குருவிடம் அணிந்த மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.

    5. நமதுநெருங்கிய ரத்த சம்பந்தமுள்ளவர்களில் மரணம் ஏற்படுமானால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிவிட்டுத்தான் துக்க காரியத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

    6. ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு மலைக்கு செல்வதை விட்டுவிட வேண்டும்.

    7. பெண்களின் சடங்கு நிகழ்ச்சிக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.

    8. இறைச்சி, மது, புகைபிடித்தல் ஆகியவற்றை அறவே நீக்கிவிட வேண்டும்.

    9. மாலை அணிந்த எந்த பக்தரின் வீட்டிலும் சாப்பிடலாம். ஆனால். மற்றவர்கள் வீட்டில் பால், பழம் மட்டும் ஏற்றுக் கொள்ளலாம்.

    10. வீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால் ஏழு நாட்கள் கழிந்த பின்னர்தான் அவர்கள் சமைத்த உணவை சாப்பிட வேண்டும்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    Next Story
    ×