search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கருங்கல்பாளையம் யோக ஆஞ்சநேயர் கோவிலில் லட்சுமி நரசிம்மர் சிலை பிரதிஷ்டை
    X

    கருங்கல்பாளையம் யோக ஆஞ்சநேயர் கோவிலில் லட்சுமி நரசிம்மர் சிலை பிரதிஷ்டை

    கருங்கல்பாளையம் யோக ஆஞ்சநேயர் கோவிலில் லட்சுமி நரசிம்மர் சிலை பிரதிஷ்டை வரும் 1-ந் தேதி நிறுவப்படுகிறது.
    ஈரோடு கருங்கல்பாளையம் காளிங்கராயன் வாய்க்கால் அருகில் ஸ்ரீயோக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு ஆஞ்சநேயர் அருள் பெற்று செல்கிறார்கள்.

    தற்போது இந்த கோவிலில் பக்தர்களின் வசதிக்காகவும் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை படி ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    இந்த சிலை பிரதிஷ்டை செய்யும் விழா வரும் 1-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு மேல் சிறப்பாக நடக்கிறது.

    முன்னதாக நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு வாழ்வை வளமாக்கும் வாஸ்து சாந்தி, காக்கும் கடவுளுக்கு காப்பு கட்டுதல், யாகசாலா பிரவேசம், முதற்கால ஹோமம், தீபாராதணை போன்றவை நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு மேல் பிம்ப சுத்தி திருமஞ்சனம், சயனாதிவாசம், அஷ்ட பந்தனம் சாற்றுதல் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து 1-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு மேல் திவ்யபரபந்த வேத பாராயணம், பிரான பிரதிஷ்டை ஹோமம், நாடி சந்தானம் ஆகியவை நடக் கிறது. காலை 8 மணி முதல் 9 மணிக்குள் யாத்ரா தானம் கலசங்கள் புறப்பாடு, தச தரிசனம், ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சிலை நிறுவப்பட்டு விஷேச பூஜைகள், தீபாராதனை நடக்கிறது.

    விழாவில் பெங்களூர் ஸ்ரீஸ்ரீகுருகுலம் ஆசிரியர் அவினாசி பி.முரளி பட்டாச் சார்யார், ஈரோடு கொங்கு பெருமாள் கோவில் எல்.ரவி அய்யங்கர் ஆகியோர் கலந்து கொண்டு பூஜைகள் நடத்தி லட்சுமி நரசிம்மர் சிலையை பிரதிஷ்டை செய்கிறார்கள்.

    இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு யோக ஆஞ்சநேயரையும், லட்சுமி நரசிம்மரையும் வழிபட்டு செல்கிறார்கள்.
    Next Story
    ×