search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா வருகிற 10-ந்தேதி நடக்கிறது
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா வருகிற 10-ந்தேதி நடக்கிறது

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா வருகிற 10-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா வருகிற 10-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் பூஜை காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.30 மணி அளவில் சந்தனு மண்டபம் வந்து சேருவார்.

    காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். மாலை 5.30 மணிக்கு அலங்காரம் அமுது செய்து மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

    2-ம் புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்து சேருகிறார்.

    இரவு 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை நம்பெருமாளுக்கு 365 வஸ்திரம், வேளையம், கற்பூர ஆரத்தி அரையர் சேவையுடன் நடைபெறும். இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை கைசிக புராணம் வாசிக்கப்படுகிறது.

    வருகிற 11-ந்தேதி அதிகாலை 5.15 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்படுகிறார்.

    காலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை நடைபெறும். காலை 6 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 10-ந்தேதி மூலஸ்தானத்தில் விஸ்வரூப சேவை காலை 6 மணி முதல் இரவு 7.15 மணி முடிய நடைபெறும்.

    காலை 7.15 மணி முதல் காலை 10 மணி வரை பூஜை கால புறப்பாடாகும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மூலவர் சேவை உண்டு.

    மாலை 5 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது. அன்றைய தினம் மற்ற சன்னதிகளில் இரவு 8 மணிக்கு மேல் சேவை கிடையாது.

    மேற்கண்ட தகவல் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×