search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா
    X

    வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா

    வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெற்றது.
    தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி அருகே உள்ள வட்டன்விளை தெற்கு தெரு முத்தாரம்மன் கோவில் வருடாந்திர கொடை விழா கடந்த 6-ந்தேதி காலை 7 மணிக்கு வருசாபிஷேகத்துடன் தொடங்கியது. நண்பகல் 1 மணிக்கு ஏராளமான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நேற்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு நாடு நலம் பெற வேண்டியும்,சமத்துவம் சகோதரத்துவம் வளர வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு வில்லிசை, தொடர்ந்து இளைய பெருமாள் குழுவினரின் மெல்லிசை கச்சேரியும் நடந்தது.

    இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 8 மணிக்கு மேள வாத்தியங்கள் மற்றும் வாணவேடிக்கையுடன் 108 பால் குடம் ஊர்வலம் நடந்தது. நண்பகல் 1 மணிக்கு சிறப்பு தீபாராதனையுடன் கும்பம் தெரு வீதி வருதல் நடந்தது. இரவு 7 மணிக்கு சுமங்கலி பூஜை நடக்கிறது.தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. நடு இரவு 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் கும்பம் தெரு வீதி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (புதன்கிழமை) நண்பகல் 1 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், வில்லிசை நடக்கிறது. இரவு 7 மணிக்கு மாவிளக்கு பூஜை, நடு இரவு 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் திரைப்பட இன்னிசை கச்சேரி, கரகாட்டம் ஆகியன நடைபெறுகிறது.
    Next Story
    ×