search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஹாசனாம்பா கோவிலில் 11 நாட்களில் சிறப்பு தரிசன கட்டணமாக ரூ.1 கோடியே 65 லட்சம் வசூல்
    X

    ஹாசனாம்பா கோவிலில் 11 நாட்களில் சிறப்பு தரிசன கட்டணமாக ரூ.1 கோடியே 65 லட்சம் வசூல்

    ஹாசனாம்பா கோவிலில் 11 நாட்களில் மட்டும் ரூ.1 கோடியே 65 லட்சம் சிறப்பு தரிசன கட்டணமாக வசூல் ஆகியுள்ளதாக உதவி கலெக்டர் நாகராஜ் கூறினார்.
    ஹாசன் டவுன் பகுதியில் அமைந்துள்ள ஹாசனாம்பா கோவில் உலகப்புகழ் பெற்ற தாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நவம்பர் 1-ந் தேதி (அதாவது இன்று) வரை 13 நாட்களுக்கு கோவில் நடை திறக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சைத்ரா அறிவித்து இருந்தார். அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.

    கோவில் நடை திறக்கப்பட்டது முதல் கர்நாடக மாநிலத்தில் இருந்து மட்டுமில்லாமல், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். மேலும் அரசியல் பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் ஆகியோரும் தங்களது குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் ஹாசன் மாவட்ட உதவி கலெக்டர் நாகராஜ் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஹாசனில் உள்ள ஹாசனாம்பா கோவிலில் சிறப்பு தரிசன கட்டணமாக ரூ.300-ஐ (ஒரு நபருக்கு) மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது.

    அதன்படி பக்தர்கள் சிறப்பு தரிசன கட்டணமாக ரூ.300 செலுத்தி அம்மனை தரிசித்து செல்கின்றனர். கடந்த 20-ந் தேதி முதல் இன்று(நேற்று முன்தினம்) வரை 11 நாட்களில் சிறப்பு தரிசன கட்டணமாக ரூ.1 கோடியே 65 லட்சம் வசூல் ஆகியுள்ளது. வருகிற 1-ந் தேதியுடன்(இன்று) கோவில் நடை மூடப்படு வதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தரிசன கட்டணமும் கூட வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×