search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிங்கிரிக்குடி நரசிம்மர் பற்றிய 20 சிறப்புகள்
    X

    சிங்கிரிக்குடி நரசிம்மர் பற்றிய 20 சிறப்புகள்

    சிங்கிரிக்குடி நரசிம்மர் பற்றிய 20 சிறப்பான தகவல்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    1. எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் தசஅவதாரங்களில் மிக முக்கியமானது, தீமைகளை அழித்து நன்மையை வாழ நீவைத்த ஸ்ரீ நரசிம்ம அவதாரமாகும். இந்த நரசிம்ம அவதாரமே, இத்திருக்கோயிலின் மூல மூர்த்தியாக அமையப் பெற்றுள்ளது.
     
    2. பதினாறு திருக்கரங்களுடன் அமையப்பெற்ற ஸ்ரீ நரசிம்மர் தமிழ் நாட்டில் இத்தலம் தவிர வேறெங்கும் இல்லை என்பது மிகசிறப்பான ஒன்றாகும்.

    3. இரணியனின் மகன் பிரகலாதனுக்காக இரணியனின் கொடுமைகளை அழிக்க தூணிலிருந்து தோன்றிய அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இது சிங்கிரிகுடி நரசிம்மர் வரலாறு குறித்து மார்கண்டேய புராணத்துள் நரசிம்ம வன மாயுபத்மியம் என்ற பகுதியில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

    4. இத்திருக்கோயிலில் அமையப்பெற்ற அனைத்து கல்வெட்டுகளுமே முற்றுபெறாத நிலையில் காணப்படுகிறது. இராஜ கோபுரவாயிலில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியுடைய ஒரு கல்வெட்டு செய்யுள் வடிவில் அமைந்துள்ளது. மகா மண்டபத்தின் தெற்கு சுவரில் கி.பி. 12 ம் நு£ண்றாண்டின் எழுத்தமைதியுடைய கல்வெட்டு ஒன்று உள்ளது.

    5. நீண்ட சதுரமான மாடவீதிகளை கொண்ட சிங்கிரிகுடி எனும் ஊரில் நடுநாயகமாக அமையப் பெற்றுள்ளது இத்திருக்கோயில்.

    6. இத்திருக்கோயில் மேற்குதிசை நோக்கி அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருக்கோயிலாகும்.

    7. ஐந்து நிலைகளை கொண்ட கம்பீரமான இராஜ கோபுரமும் வைணவ சிந்தாத்தப்படியான 24 தூண்களை கொண்ட வசந்த மண்டபமும் அமைந்துள்ளது.

    8. வைணவத் திருக்கோயிலான இத்திருக்கோயில் இராஜ கோபுரத்தை அடுத்து பிள்ளையார் திருகோயிலும் அமையப்பெற்றது. வேறெங்கும் காண இயலாத தனிச்சிறப்பாகும்.

    9. இத்திருக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்மர், திருவகீந்திரபுரத்து தேவ நாதனே என திருமங்கை ஆழ்வாரது பாசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

    10. இத்தலத்தில் 1. ஸ்ரீ நரசிம்மர் சன்னதி, 2. ஸ்ரீ கனகவல்லி தாயார் சன்னதி, 3. ஸ்ரீ ஆண்டாள் சன்னதி, 4. ஸ்ரீ ராமர் சன்னதி, 5. ஆழ்வார்கள் சன்னதி, 6. ஸ்ரீ விநாயகர், 7. ஸ்ரீ துர்க்கா சன்னதி ஆகியவை முக்கிய சன்னதிகளாகும்.

    11, சன்னதி திறந் திருக்கும் நேரங்கள்:
    காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை
    மாலை 4.30 மணி முதல் 9.00 மணி வரை

    12. பூஜை காலங்கள்:
    காலை 9.00 மணி: காலைசந்தி
    பகல் 12.00 மணி : உச்சிக்காலம்
    மாலை 6.00 மணி : நித்தியாணு
    மாலை 6.30 மணி : சாயரட்சை
    இரவு 8.30 மணி : அர்த்தசாமம்

    13. இத்தலத்து தாயார் பெயர் ஸ்ரீ கனகவல்லித் தாயார்

    14. விமானத்தின் பெயர் : ஸ்ரீ பாவன விமானம்.

    15. ஜமத்க்கனி தீர்த்தம், இந்திர தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் சிங்கிரிகுடியில் உள்ளன.

    16. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

    17. தை மாதம் மாட்டுப் பொங்கல், ஸ்ரீ தாயார் தீர்த்தவாரி நடைபெறும்.

    18. சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    19. புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்தும் திருப்பாதிரிப்புலியுர் ரயில் நிலையத்திலிருந்து சமதொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

    20. இத்தலம் கடலூர், புதுச்சேரியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.
    Next Story
    ×