search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விநாயகருக்கு மூஷிக வாகனம் வந்த கதை
    X

    விநாயகருக்கு மூஷிக வாகனம் வந்த கதை

    விநாயகருக்கு மூஷிக வாகனம் எப்படி கிடைத்தது என்ற கதையை கீழே விரிவாக பார்க்கலாம்.
    கோகுலத்துக் கண்ணன் போலவே கயிலை கணபதியும்  பல தருணங்களில் பல இடங்களில் எண்ணற்ற அற்புத லீலைகளை நிகழ்த்தியிருக்கிறார். விநாயக சதுர்த்தி புண்ணிய தினத்தில் அந்த லீலைகளை- கணபதி குறித்த திருக்கதைகளைப் படிப்பதால், சகல சுபிட்சங்களும் கைகூடும்.

    அற்புதமான இந்தக் கதை கந்தபுராணத்தில் உள்ளது. மாகத முனிவருக்கும் விபூதி என்ற அசுரப் பெண்ணுக்கும் தோன்றிய அசுரன் கஜமுகன். அவன் அசுரர்களின் குருவாகிய சுக்கிராச்சார்யரின் உபதேசத்தின்படி சிவபெருமானை எண்ணி தவம் இயற்றி, ஆயுதங்களால் அழிக்கமுடியாத வரத்தைப் பெற்றான். தனது வரத்தின் பலத்தினால் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான்.

    திக்கற்றவர்க்கு தெய்வம்தானே துணை. இந்திரனும் திருக்கயிலைக்குச் சென்று பிள்ளையார் பெருமானிடம் முறையிட்டான். அவர்களது துன்பங்களைத் தீர்க்க திருவுளம் கொண்டார் விநாயகர். ஆகவே, கணங்களும் படை பரிவாரங்களும் சூழ, கஜமுகாசுரனுடன் போருக்குச் சென்றார். அசுரன் பல அஸ்திரங்களை விநாயகர் மீது ஏவினான். அவற்றை எல்லாம் தன் திருக்கரத்தில் இருந்த உலக்கையால் முறியடித்து வீழ்த்தியபடி, அசுரனை நெருங்கிய விநாயகர், அதே உலக்கையால் அவனது மார்பில் ஓங்கி அடித்தார்.

    ஆனாலும் அசுரன் மயங்கத்தான் செய்தானே தவிர, மடியவில்லை. ஆயுதத் தால் அவனை அழிக்க முடியாது என்பதை உணர்ந்த விநாயகர் தன் தந்தத்தை உடைத்து, அவன் மீது ஏவினார். அசுரனோ, பெருச்சாளியாக உருவம் கொண்டு வந்தான். விநாயகர் அவனை ஆட்கொண்டு, தம் வாகனமாக அமர்த்திக் கொண்டார்.
    Next Story
    ×