search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செவந்தலிங்கபுரம் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
    X

    செவந்தலிங்கபுரம் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

    முசிறி அருகே செவந்தலிங்கபுரம் கிராமத்தில் மதவாயி அம்மன், பெரியகாண்டியம்மன் கோவில் மண்டல அபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.
    முசிறி அருகே செவந்தலிங்கபுரம் கிராமத்தில் மதவாயி அம்மன், பெரியகாண்டியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்திற்குப்பின் நடைபெற்ற மண்டல அபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.

    மதவாயி அம்மன், பெரிய காண்டியம்மன், நாக ப்பசுவாமி, தேக்கமலையான், பெரியண்ணசுவாமி, பனையடியான், சங்கிலி கருப்பு உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக 48 நாட்கள் மண்டல அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

    நாள்தோறும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை ஆகிய வைகள் நடைபெற்றன. மண்டல அபிஷேகத்தின் நிறைவு நாள் விழாவை யட்டி சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளுக்குப்பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×