search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அரியாங்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    அரியாங்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    புதுவை மாநிலம் அரியாங்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    புதுவை மாநிலம் அரியாங்குப்பம் சுப்புராயப்பிள்ளை வீதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் சிறப்பு சிவ தீபகற்பத்தில் அமைந்துள்ளதாகும். அதாவது, திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலுக்கு தெற்கு திசையிலும், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வடக்கு திசையிலும், மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு கிழக்கு திசையிலும், வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலுக்கு மேற்கு திசையிலும் அமைந்துள்ளது.

    இத்தகைய சிறப்புபெற்ற இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகள் முடிந்த நிலையில் கடந்த 14-ந் தேதி மாலை கும்பாபிஷேக விழா தொடங்கியது. திருவிளக்கு பூஜை, வேள்வி நிறைவு நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து 15-ந் தேதி காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு வழிபாடுகளும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 5 மணியளவில் யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி, கடம்புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. காலை 8.30 மணிக்கு விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தில் அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.,க்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன், முன்னாள் சேர்மன்கள் விநாயகமூர்த்தி, ஆனந்தன், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.
    Next Story
    ×