search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பக்தர்கள் இருமுடி கட்டுடன் புனித ஊர்வலம்
    X

    கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பக்தர்கள் இருமுடி கட்டுடன் புனித ஊர்வலம்

    கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பக்தர்கள் இருமுடி கட்டுடன் புனித ஊர்வலம் 6-ந் தேதி தொடங்குகிறது.
    குமரி மாவட்ட எல்லையான பத்துகாணி காளிமலையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் துர்காஷ்டமி திருவிழா வருகிற 6-ந்தேதி தொடங்கி 11-ந் தேதி வரை 6 நாள் நடக்கிறது. 

    இதையொட்டி வருகிற 6-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பக்தர்கள் இருமுடி கட்டு மற்றும் புனிதநீர் சுமந்து ஊர்வலமாக புறப்பட்டு செல்கிறார்கள். இந்த ஊர்வலத்துக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட ரதம் செல்கிறது. இந்த புனித ஊர்வலத்தின் தொடக்கவிழா கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் முன்பு வருகிற 6--ந் தேதி காலை 8.30 மணிக்கு நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் முன்பு இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் விவேகானந்தபுரம், கொட்டாரம், அச்சன்குளம், பொற்றையடி, சுசீந்திரம், இடலாக்குடி, கோட்டார், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி, வடசேரி, கிருஷ்ணன் கோவில், வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம், சுங்கான்கடை, தோட்டியடு, வில்லுக்குறி, புலியூர் குறிச்சி, தக்கலை, சுவாமியார்மடம், இரவி புதூர்கடை, மார்த்தாண்டம், உண்ணாமலைகடை, ஆற்றூர், சிதறால், களியல், கடையாலுமூடு வழியாக வருகிற 9--ந் தேதி பத்துகாணி காளிமலை பத்திரகாளி அம்மன் கோவிலை சென்று அடைகிறது.  
    Next Story
    ×