search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அமாவாசை அன்று புதிய திட்டங்களை தொடங்கலாமா?
    X

    அமாவாசை அன்று புதிய திட்டங்களை தொடங்கலாமா?

    அமாவாசை அன்று புதிய செயல்களை தொடங்குவது முறையானது அல்ல என்று சொல்வது ஏன் என்பதை கீழே பார்க்கலாம்.
    அமாவாசை நாளை ஒரு சிலர் நல்ல நாள், நல்ல செயலை மேற்கொள்ளலாம் என்கிறார்கள். வேறு சிலர் அது முன்னோர்கள் நினைவு தினம், அதனால் நல்ல விஷயம் செய்யக்கூடாது என்கிறார்கள். எது உண்மை என்று பார்க்கலாம்.

    அமாவாசை என்பது பித்ருக்களுக்கான தினம் என்பது உண்மையே. தந்தைக்கு உரிய கோள் ஆகக் கருதப்படும் சூரியனும், தாயாரைக் குறிக்கும் கோள் ஆன சந்திரனும் ஒரே ராசியில் ஒரே நட்சத்திரப் பாகையில் இணையும் நாளே அமாவாசை. அதனால்தான் அன்றைய தினம் நம் வீட்டில் முன்னோர்கள் நினைவாக இலைபோட்டு படையல் வைக்கிறோம். எள்ளும், தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்கிறோம்.

    இந்த நாளில் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலில் போட்டிகளைச் சந்திக்கின்ற வகையில் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவது, அல்லது ஏற்கனவே தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் ஒரு செயல்பாட்டில் புதிய நடைமுறைகளை அமல்படுத்துவது முதலான செயல்களில் ஈடுபடலாம். 

    மாறாக, புதிய வீட்டில் பால் காய்ச்சுதல், கிரஹபிரவேசம், திருமணம் சார்ந்த நிகழ்வுகள், (பெண்பார்க்கும் நிகழ்ச்சி, பந்தல்கால் நடுதல், நிச்சயதார்த்தம் போன்றவை) முற்றிலும் புதிய வியாபாரம் துவங்குதல், முதன்முதலில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யக்கூடாது. 

    Next Story
    ×