search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முசிறியில் கருமாரியம்மன் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு
    X

    முசிறியில் கருமாரியம்மன் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு

    முசிறியில் உள்ள தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோவிலில் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.
    முசிறியில் உள்ள தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோவிலில் ஆளுடைய அடிகள் திருக்கூட்டம் மற்றும் தர்ம ரக்சன சமிதி இணைந்து நடத்திய சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. 

    விழாவிற்கு நாமக்கல் ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரம தலைவர் ஸ்ரீமத் சுவாமி பூரணசேவானந்த மகராஜ் கலந்து கொண்டு அன்றாட வாழ்வில் ஆன்மிகம் என்ற தலைப்பில் அன்றாடம் நாம் செய்யகூடிய பணிகளை பக்திபூர்வமாக செய்வதிலேயே அமைந்துள்ளது எனவும், அதை எவ்வாறு நாம் கடைபிடிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்கி பேசினார். 

    மேலும் எதையும் நாம் இலவசமாக பெறக்கூடாது, இறைவன் நமக்கு அம்மா, அப்பா, குழந்தை மற்றும் நம் உடம்பை இலவசமாக கொடுத்துள்ளார். நம் உடம்பை கொண்டு உழை த்து வாழ வேண்டும். பிறர் பொருளுக்கோ, பிறர் கொடுக்கும் இலவசத்துக்கோ ஆசை படக்கூடாது எனவும் எடுத்துரைத்தார். 

    விழாவில் ஆளுடைய அடிகள் திருக்கூட்டத்தின் தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் சந்திரசேகர், கணிராஜா மற்றும் தர்ம ரக்சன ஸமிதியின் அமைப்பாளர்கள் திருநாவுக்கரசு, கல்யாணசுந்தரம், முசிறி பொதுச் செயலாளர் வழிகாட்டி ராஜா, இணைச் செயலாளர்கள் மகேந்திரன், பரமகுரு, கலைச்செல்வி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    முடிவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை தர்ம ரக்சன ஸமிதியும், ஆளுடைய அடிகள் திருக்கூட்ட நிர்வாகிகளும் செய்திருந்தனர்.


    Next Story
    ×