search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    8 வகை ஆலயங்கள்
    X

    8 வகை ஆலயங்கள்

    வரலாற்று ஆசிரியர்கள் ஆலயங்களை 8 வகைகளாக பிரித்துக் காட்டியுள்ளனர்.
    சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர், பண்டைக்கால கோவில்களின் வகைகள் குறித்து தனது தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். வரலாற்று ஆசிரியர்கள் கூட ஆலயங்களை 8 வகைகளாக பிரித்துக் காட்டியுள்ளனர்.

    * மலைகள் மீது அமைக்கப்படும் கோவில்கள், ‘பெருங்கோவில்’ என்று அழைக்கப்படுகின்றன.

    * உயர்வான மேடைகளின் மீது அமைந்த ஆலயங்கள் ‘மாடக்கோவில்’ என்று பெயர் பெற்றுள்ளன.

    * தேர் போன்ற அமைப்பில் கட்டப்பட்ட கோவில்கள் ‘கரக்கோவில்’ எனப்படுகின்றன.

    * கொடிகள் சூழ்ந்த நிலையில் அமைந்த கோவில்கள் ‘கொகுடிக் கோவில்’ என்று அழைக்கப்படுகின்றது.

    * மரங்களால் உருவாக்கப்பட்ட ஆலயங்களுக்கு ‘ஞாழற்கோவில்’ என்று பெயர்.

    * கோவில்களைப் பழுது பார்க்கும் போது பாலாலயம் அமைப்பது ‘இளங்கோவில்’ எனப்படுகின்றன.

    * மணி போல விமானங்கள் அமையப்பெற்ற கோவில்கள் ‘மணிக்கோவில்’ ஆகும்.

    * ஆல மரத்தின் அடியில் அமைக்கப்பட்ட ஆலயங்கள் ‘ஆலக்கோவில்’ எனப்படுகிறது.

    Next Story
    ×