search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா: குருவாயூரப்பன், வேணுகோபால சாமி கோவில்களில் சிறப்பு பூஜை
    X

    திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா: குருவாயூரப்பன், வேணுகோபால சாமி கோவில்களில் சிறப்பு பூஜை

    திருப்பூரில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி குருவாயூரப்பன் கோவில் மற்றும் வேணுகோபாலசாமி கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பூர்–ஊத்துக்குளி ரோட்டில் பிரசித்தி பெற்ற குருவாயூரப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி காலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 6 மணிக்கு அபிஷேக பூஜையும் அதைத் தொடர்ந்து கோமாதா பூஜையும் நடைபெற்றது.

    காலை 6.30 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. அதைதொடர்ந்து காலை 7 மணிக்கு தீபாராதனையும், 8 மணிக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டு அழைத்து வந்திருந்தனர். கிருஷ்ணஜெயந்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உறியடி உற்சவம் மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
    வேணுகோபாலசாமி கோவில்

    திருப்பூர் ராயபுரத்தில் பூமிநீளா சமேத வேணுகோபால கிருஷ்ணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா உற்சவம் கடந்த 22–ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தினசரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.

    பின்னர் காலை 7 மணிக்கு அபிஷேக பூஜையும், அதைத்தொடர்ந்து கிருஷ்ணசாமிக்கு வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு திருவீதி உலா நிகழ்ச்சியும், 9 மணிக்கு உறியடி உற்சவமும், நாளை (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.
    Next Story
    ×