search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்ட ருத்ராக்ஷம்
    X

    சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்ட ருத்ராக்ஷம்

    சூரியனின் மையம் ருத்ரமண்டலம் என அழைக்கப்படுவதை கொண்டு ருத்ராம்சம் என்பது எத்தகைய ஆற்றல் வாய்ந்தது என பொருள் கொள்ளலாம்.
    ருத்ரன் எனும் சிவ அம்சம் அதிக ஆற்றல் வாய்ந்த, வேகமான ஆன்ம உணர்வை ஊட்டும் நிலையாகும். தவநிலையிலிருந்து வெளிப்பட்டவுடன் அதிக வேகமான இயக்க நிலைக்கு சிவன் மாற்றம் மடையும் தன்மை ருத்ராம்சம் என அழைக்கப்படும்.

    சூரியனின் மையம் ருத்ரமண்டலம் என அழைக்கப்படுவதை கொண்டு ருத்ராம்சம் என்பது எத்தகைய ஆற்றல் வாய்ந்தது என பொருள் கொள்ளலாம். ருத்ரநிலையில் தனது புருவ மத்தியில் உள்ள மூன்றாம் கண்ணை திறக்கும் பொழுது வெளிப்பட்டஆற்றல் திண்ம வடிவில் மாற்றம் அடைவதே ருத்ராக்ஷம் என அழைக்கிறோம்.

    ஆக்ஷம் என்ற சொல்லுக்கு " கண்ணிலிருந்து வெளிப்படுவது" என்றும் பொருள் கொள்ளமுடியும். ருத்ரனின் நெற்றி கண்ணிலிருந்து உதிரும் பொருள் என சரியாக மொழி பெயர்க்க வேண்டும். இதன் மூலம் சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும். சூரியன் எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது.

    Next Story
    ×