search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஈரோடு செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா
    X

    ஈரோடு செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா

    ஈரோடு செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் வந்தனர்.
    ஈரோடு நேதாஜிரோடு முனிசிபல்சத்திரத்தில் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து நேற்று காவிரி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி காலையில் பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடினார்கள். பின்னர் அங்கிருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அப்போது சில பக்தர்கள் கடவுள் வேடமிட்டு அலகுகுத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து தொடங்கிய ஊர்வலம் காவிரிரோடு, ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு வழியாக செல்லாண்டியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. அதன்பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு குண்டம் விழாவும், பகல் 12 மணிக்கு பொங்கல் விழாவும் நடக்கிறது. வருகிற 7-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
    Next Story
    ×