search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கல்வி, செல்வம், வீரம் மூன்றும் அருளும் அற்புத ஸ்லோகம்
    X

    கல்வி, செல்வம், வீரம் மூன்றும் அருளும் அற்புத ஸ்லோகம்

    கீழே கொடுக்கப்பட்டுள்ள துதியை தினமும் பாராயணம் செய்தால் அம்பிகையின் திருவருளோடு சரஸ்வதி கடாட்சமும் லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும்.
    லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பிகைக்கு இரு புறங்களிலும் லட்சுமியும் சரஸ்வதியும் வீற்றருள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நவமணிமாலை எனும் துதியை தினமும் பாராயணம் செய்தால் அம்பிகையின் திருவருளோடு சரஸ்வதி கடாட்சமும் லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் அருளும் அற்புத துதி இது:

    வாணீம் ஜிதஸுகவாணீமளிகுல
    வேணீம் பவாம்புதித்ரோணீம்
    வீணாஸுகஸிஸுபாணீம்
    நதகீர்வாணீம் நமாமி ஸர்வாணீம்

    வேதரூபியும் இனிமையால் கிளியின் இன்சொல்லை ஜெயித்தவளும் கருவண்டுக் கூட்டம் போன்ற பின்னலை உடையவளும் ஸம்ஸார ஸமுத்திரத்தைக் கடப்பதற்குத் தோணி போன்றவளுமான அம்பிகையே நமஸ்காரம். வீணை, கிளிப்பிள்ளையைக் கைகளில் ஏந்திய சரஸ்வதியினால் வணங்கப்பட்டவளே, பரமசிவனுடைய பத்தினியே, நமஸ்காரம்.



    குவலயதளநீலாங்கீம் குவலயரக்ஷைகதீக்ஷிதாபாங்கீம்
    லோசனவிஜிதகுரங்கீம் மாதங்கீம் நமாமி ஸங்கரார்தாங்கீம்

    நீலோத்பல புஷ்பத்தின் இதழ் போன்ற சரீரத்தை உடையவளே, பூமண்டலத்தை ரட்சிப்பதையே முக்கிய விரதமாகக் கொண்டு, கடைக்கண் பார்வையால் அவ்வாறே அனுக்ரகிப்பவளே நமஸ்காரம். மான்களையும் தன் கண்களின் அழகால் வெட்கப்பட வைத்தவளே, மதங்க மகரிஷியின் புத்திரியே, சங்கரனின் பாதியுடலில் வசிப்பவளே, அம்பிகையே, நமஸ்காரம்.

    கமலாகமலஜகாந்தா கரஸாரஸ
    தத்தகாந்த கரகமலாம்
    கரயுகலவித்ருதகமலாம் விமலாம்
    கமலாங்கசூட ஸகலகலாம்

    லட்சுமி, சரஸ்வதி இவர்களின் தாமரைப் பூக்கள் போன்ற கரங்களில் வைக்கப்பட்ட இன்னொரு தாமரை போன்ற தளிர்க் கரங்களை உடையவளே, இரண்டு கைகளிலும் தாமரையைத் தரித்தவளே, நிர்மலமாயிருப்பவளே, சந்திர சூடனான பரமசிவனுடைய சகல வித்யையின் உருவமாக இருப்பவளே, பராசக்தியே நமஸ்காரம்.

    Next Story
    ×