search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜோதிமயமான வாழ்வளிக்கும் ஜோதிர்லிங்க ஸ்லோகம்
    X

    ஜோதிமயமான வாழ்வளிக்கும் ஜோதிர்லிங்க ஸ்லோகம்

    அந்தத் துதியை சிவனுக்கு உகந்த நாட்களில் துதித்தால் அனைத்து நலன்களும் கிட்டுவதோடு 12 ஜோதிர்லிங்கங்களை தரிசித்த மகத்தான புண்ணியமும் சேரும்.
    ஆதிசங்கரர் அருளிய த்வாதச லிங்க ஸ்தோத்திரம் :

    ஸௌராஷ்ட்ர தேசே வஸுதாவகாரே
    ஜ்யோதிர்மயம் சந்த்ர கலாவதம்ஸம்
    பக்திப்ராதாய க்ருதாவதாரம்
    தம் ஸோமநாதம் சரணம் ப்ரபத்யே

    மிகவும் புண்ணியம் வாய்ந்ததான ஸௌராஷ்ட்ர தேசத்தில், ஒளிரும் பிறைமதியை சிரசில் தாங்கிக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக அவதரித்த சோமநாதரை நான் சரணமடைகிறேன்.

    ஸ்ரீசைலச்ருங்கே விவிதப்ரஸங்கே
    சேஷாத்ரி ச்ருங்கேபி ஸதாவஸந்தம்
    தமர்ஜுதம் மல்லிகா பூர்வதம்
    நமாமி ஸம்ஸார ஸமுத்ர ஸேதும்



    பல நல்ல அம்சங்கள் கைவரப்பெற்ற ஸ்ரீ சைலமலையின் உச்சியிலும் சேஷாத்ரி மலையுச்சியிலும் எப்போதும் வாசம் செய்பவரும் இறப்பு, பிறப்பு எனும் இரு நிகழ்வுகளுடன் கூடிய சம்சாரம் எனும் கடலில் தத்தளிக்கும் பக்தர்களுக்கு கரையாக உள்ளவருமான மல்லிகார்ஜுனரை நமஸ்கரிக்கிறேன்.

    அவந்திகாயாம் விஹிதாமதாரம்
    முக்திப்ரதாய ச ஸஜ்ஜநாநாம்
    அகாலம்ருத்யோ பரிரக்ஷணார்த்தம்
    வந்தே மஹாகாலமஹம் ஸுரேஸம்

    அவந்தி என்னும் முக்தியை அளிக்கக் கூடியதும் அகால மரணத்திலிருந்து காப்பாற்றக்கூடியதும் ஆகிய உஜ்ஜயினியில் ஆட்சிபுரிபவரும் தேவர்களின் தலைவருமான மகாகாளேஸ்வரரை மனதாலும் வாக்காலும் வணங்குகிறேன்.

    Next Story
    ×