search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துன்பம் போக்கும் தசாவதார ஸ்தோத்திர மாலை
    X

    துன்பம் போக்கும் தசாவதார ஸ்தோத்திர மாலை

    வறுமை, துன்பம், எதிரிகளின் தொல்லை, தொழிலில் நஷ்டம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இந்த ஸ்லோகம் தினமும் சொல்லி வந்தால் பலன் நிச்சயம்.
    1. ஆதியாய் அனாதியாகி ஆதிமூலப் பொருளுமாகி
    ஆலிலையில் பள்ளி கொண்ட ஆதி மூலமே -ஓம் நமோ

    2. பக்தர்களைக் காக்க வேண்டி பத்துவித வேடங்கொண்டு பல
    பலவாம் லீலை செய்த புண்ணிய மூர்த்தியே -ஓம் நமோ

    3. மத்ஸயமாகி நீரில் மூழ்கி மறைகள் நான்கும் தூக்கி வந்து
    மாபெரும் பணியைச் செய்த மாயா மூர்த்தியே -ஓம் நமோ

    4. மூழ்கி மறைந்த மந்திர கிரியை மத்தாக்கி கடல் கடையமுங்கி
    முதுகில் சுமந்து நின்ற மனோமோகனா -ஓம் நமோ

    5. பன்றியாகி ரூபம் கொண்டு பாதாளத்தில் புகுந்து சென்று
    பூமிதனை தூக்கி வந்த புண்ணிய ரூபனே -ஓம் நமோ

    6. சின்னஞ்சிறு பக்தன் வாக்கை சத்தியமாக்கிக் காட்ட வேண்டி
    சபையில் தூணில் சாடிவந்த சத்திய மூர்த்தியே -ஓம் நமோ

    7. அகிலாண்ட மத்தனையும் அடியிரண்டால் அளந்த பின்பு
    அசுரன் தலையில் அடியை வைத்த ஆதி தெய்வமே -ஓம் நமோ

    8. பரசுதனைக் கையில் கொண்டு பரமன் ராமன் எதிரில் வந்து
    பத்மனாபன் தனுஸைத் தந்த பார்க்கவ ராமா -ஓம் நமோ

    9. மமதை கொண்ட ராவணனை மூலமுடன் அழிக்க வேண்டி
    மானிடனாய் அவதரித்த மாயா மூர்த்தியே -ஓம் நமோ

    10. அண்ணனாகி சேவை செய்ய ஆர்வமுடன் கலப்பை ஏந்தி
    அரும்பணிகள் பலவும் செய்த ஆதிஜோதியே -ஓம் நமோ

    11. கர்வம் கொண்ட கம்ஸன் தனை கூண்டுடனே அழிக்க
    வேண்டி கிருஷ்ணாவதாரம் செய்த கருணாமூர்த்தியே -ஓம் நமோ

    12. கலியுகத்தில் கஷ்டம் போக்க குதிரை மீதிலேறிக் கொண்டு
    கல்கியாக வரப்போகும் சாகுந்த ராமா -ஓம் நமோ

    13. கலியுகத்தில் மக்களுக்கு கைவல்யம் கையில் தர குருவாயூரில்
    கோயில் கொண்ட கிருஷ்ண மூர்த்தியே -ஓம் நமோ

    14. ஆணவத்தால் அறிவிழந்து அகந்தை கொண்ட எந்தனுக்கு
    அறிவையூட்டி ஆதரிக்கும் ஆதிமூலமே -ஓம் நமோ

    15. பண்ணும் பாட்டும் அறியாத பித்தன் எனைப் பாடவைத்து
    பக்தனாக்கப் பாடுபடும் புண்ய ரூபனே -ஓம் நமோ

    16. நாமம் நம்பி சொல்பவர்க்கு நற்கதியைத் தருவேன் என்று
    நின்றலறி சத்தியம் செய்த நிகமவேத்யனே -ஓம் நமோ

    17. நாமம் சொல்லும் இடந்தன்னிலே நித்ய வாசம் செய்வேனென்று
    நாரதர்க்கு உறுதி தந்த நித்ய வஸ்துவே -ஓம் நமோ

    18. பூர்ணாவதாரம் கொண்டு பதினாறு கலைகள் கொண்டு
    பவனபுரம் வந்தடைந்த பூரண ரூபனே -ஓம் நமோ
    Next Story
    ×