search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சரஸ்வதிக்கு உகந்த சகலகலா வல்லி மாலை
    X

    சரஸ்வதிக்கு உகந்த சகலகலா வல்லி மாலை

    கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள் சரஸ்வதிக்கு உகந்த இந்த சகலகலா வல்லி மாலையை தினமும் அல்லது தேர்வு நேரங்களில் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.
    வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளையுள்ளம்
    தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து,
    உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக, உண்டாக்கும் வண்ணம்
    கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!

    நாடும் சொற் சுவை பொருட் சுவை தோய்தர நாற்கவியும்
    பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில்
    கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்
    காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!

    அளிக்கும் செழுந்தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
    குளிக்கும் படிக்கு என்று கூடுங்கொலோப உளம்கொண்டு தெள்ளித்
    தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
    களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே!

    தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
    வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும்
    தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
    காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

    பஞ்சு அப்பு, இதம் தரும், செய்ய, பொற்பாத பங்கேருகம் என்
    நெஞ்சத்தடத்து அலராதது என்னேப நெடுந்தாள் கமலத்து
    அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
    கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே!



    பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
    எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
    விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும், அன்பர்
    கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!

    பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
    கூட்டும்படி உன்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
    தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
    காட்டும் வெள் ஓதிமப்பேடே! சகலகலாவல்லியே!

    சொற்விற்பன்னமும், அவதானமும், கல்வி சொல்லவல்ல
    நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்! நளின ஆசனம்சேர்
    செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
    கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே!

    சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன
    நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்ப நிலம்தோய் புழைக்கை
    நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை
    கற்கும் பதாம்புயத்தாளே! சகலகலா வல்லியே!

    மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்ட மன்னரும், என்
    பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்
    விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும், விளம்பில் உன்போல்
    கண்கண்ட தெய்வம் உளதோப சகலகலா வல்லியே!
    Next Story
    ×