search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (19.12.2017 முதல் 25.12.2017 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (19.12.2017 முதல் 25.12.2017 வரை)

    19.12.2017 முதல் 25.12.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    19-ந்தேதி (செவ்வாய்) :

    * சகல விஷ்ணு ஆலயங் களிலும் திருப்பல்லாண்டு உற்சவம் ஆரம்பம்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் வேதபிரான் பட்டர் மாளிகையில் பச்சை பரப்பி கடாசித்து கோபால விலாசம் எழுந்தருளல்.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம்.
    * கீழ்நோக்கு நாள்.

    20-ந் தேதி (புதன்) :

    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள், காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    21-ந் தேதி (வியாழன்) :

    * பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு கண்டருளல்.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் சேர்த்தியில் வேணுகான கண்ணன் திருக்கோலமாய் பல்லக்கில் எழுந்தருளல்.
    * மதுரை கூடலழகர், திருமோகூர் காளமேகப்பெருமாள் ஆகிய தலங்களில் பகல் பத்து சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    22-ந் தேதி (வெள்ளி) :

    * சதுர்த்தி விரதம்.
    * திருவோண விரதம்.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ஆண்டாள் திருக்கோலம், பல்லக்கில் வீணை மோகனி அலங்காரமாய் காட்சியளித்தல்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் ஆகிய தலங்களில் திருமொழி திருநாள் உற்சவ சேவை.
    * இன்று சகல ஆலயங்களிலும் விநாயகப் பெருமானை வழிபடுதல் நன்று.
    * மேல்நோக்கு நாள்.



    23-ந் தேதி (சனி) :

    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பம்.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் காளிங்க நர்த்தனம்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்- ரெங்கமன்னார், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் பகல் பத்து உற்சவ சேவை.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு ஆராதனை.
    * மேல்நோக்கு நாள்.

    24-ந் தேதி (ஞாயிறு) :

    * ஸ்ரீவிநாயகர் சஷ்டி.
    * சஷ்டி விரதம்.
    * திருச்செந்தூர், திருநெல்வேலி, மதுரை, சிதம்பரம், சுசீந்திரம், செப்பரை ஆகிய கோவில்களில் திருவாதிரை உற்சவம் ஆரம்பம்.
    * திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர், திருவள்ளூர் வீரராகவர் ஆகிய தலங்களில் பகல் பத்து உற்சவம் ஆரம்பம்.
    * மேல்நோக்கு நாள்.

    25-ந் தேதி (திங்கள்) :

    * கிறிஸ்துமஸ் பண்டிகை.
    * ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர், முதலமைச்சர் திருக் கோலத்துடன் இரவு பூத வாகனத்தில் பவனி.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்ச லீலை.
    * குடந்தை சாரங்கபாணி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆகிய தலங்களில் பகல் பத்து உற்சவம்.
    * சிதம்பரம் சிவபெருமான் காலை சந்திர பிரபையிலும், இரவு அன்ன வாகனத்திலும் வீதி உலா.
    * கீழ்நோக்கு நாள்.
    Next Story
    ×