search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (17.10.2017 முதல் 23.10.2017 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (17.10.2017 முதல் 23.10.2017 வரை)

    (17.10.2017 முதல் 23.10.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    17-ந் தேதி (செவ்வாய்) :

    பிரதோஷம்.
    சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    திருக்குற்றாலம் சிவ பெருமான் திருவீதி உலா.
    குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு கண்டருளல்.
    கீழ்நோக்கு நாள்.

    18-ந் தேதி (புதன்) :

    தீபாவளி பண்டிகை.
    மாத சிவராத்திரி.
    திருச்செந்தூர் சுப்பிர மணியர் தீர்த்த அபிஷேகம்.
    வள்ளியூர் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம், வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா.
    மதுரை மீனாட்சி அம்மன் வைர கிரீடம் சாத்தி அருளல்.
    மேல்நோக்கு நாள்.

    19-ந் தேதி (வியாழன்) :

    கேதார கவுரி விரதம்.
    அமாவாசை.
    திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.
    வள்ளியூர் முருகப்பெருமான் காலையில் கலைமான் கிடா வாகனத்திலும், இரவு ஏக சிம்மாசனத்திலும் பவனி வரும் காட்சி.
    உத்திரமாயூரம் தட்சிணாமூர்த்தி கயிலாச பர்வத வாகனத்திலும், கங்கை அம்மன் மகர வாகனத்திலும் காவேரிக்கு எழுந்தருளல்.
    சமநோக்கு நாள்.

    20-ந் தேதி (வெள்ளி) :

    சகல முருகன் கோவில் களிலும் கந்தசஷ்டி உற்சவம் தொடக்கம்.
    சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    குமாரவயலூர் முருகப்பெருமான் கோவில் தெய்வானை சமேத முருகப்பெருமான் பச்சை சாத்தி மயில் வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
    வள்ளியூர் முருகப்பெருமான் பூத வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும் புறப்பாடு.
    சமநோக்கு நாள்.



    21-ந் தேதி (சனி) :

    சிக்கல் சிங்கார வேலவர் ஆலயத்தில் சுவாமிக்கு நாகாபரண காட்சி, இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா.
    வள்ளியூர் முருகப்பெருமான் காலை ஏக சிம்மாசனத்திலும், இரவு வெள்ளி மயில் வாகனத்திலும் புறப்பாடு.
    குச்சனூர் சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை.
    சமநோக்கு நாள்.

    22-ந் தேதி (ஞாயிறு) :

    வள்ளியூர் முருகப்பெருமான் காலை கேடய சப்பரத்திலும், இரவு பூங்கோவில் சப்பரத்திலும் பவனி.
    சிக்கல் சிங்கார வேலவர் காலை மோகன அவதாரத்தில் காட்சி அருளல், இரவு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.
    கீழ்நோக்கு நாள்.

    23-ந் தேதி (திங்கள்) :

    சதுர்த்தி விரதம்.
    நெல்லை கெட்வேல் ஆஞ்சநேயர் கோவிலில் வருசாபிஷேகம்.
    குமாரவயலூர் முருகப்பெருமான் கஜமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல்.
    சிக்கல் சிங்கார வேலவர் வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி அருளல்.
    வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்தில் புறப்பாடு கண்டருளல்.
    உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
    சமநோக்கு நாள்.
    Next Story
    ×