search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (26.9.2017 முதல் 2.10.2017 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (26.9.2017 முதல் 2.10.2017 வரை)

    26.9.2017 முதல் 2.10.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    26-ந்தேதி (செவ்வாய்) :

    * சஷ்டி விரதம்.
    * திருப்பதி திருவேங்கடமுடையான் காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபாள வாகனத்திலும் பவனி.
    * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை கஜேந்திர மோட்சம், மாலை கருட வாகனத்தில் திருவீதி உலா.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * சமநோக்கு நாள்.

    27-ந்தேதி (புதன்) :

    * திருப்பதி வேங்கடேசப் பெருமாள் இரவு மகர கண்டியில் லட்சுமிகார ஆபரணங்களுடன் கருடோற்சவம்.
    * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காளிங்க நர்த்தனம், மாலை சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா.
    * மதுரை மீனாட்சி நவராத்திரி கொலு மண்டபத்தில் அலங்கார காட்சி.
    * கன்னியாகுமரி பகவதி அம்மன் பவனி வருதல்.
    * சமநோக்கு நாள்.

    28-ந்தேதி (வியாழன்) :

    * துர்காஷ்டமி.
    * திருப்பதி திருவேங்கடமுடையான் காலை அனுமன் வாகனத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனத்தில் திருவீதி உலா.
    * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை ராஜாங்க அலங்காரம், மாலை மோகன அவதார காட்சி.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    29-ந்தேதி (வெள்ளி) :

    * சரஸ்வதி பூஜை.
    * திருப்பதி ஏழுமலையப்பன் காலை சூரிய பிரபையிலும், இரவு புஷ்ப விமானத்திலும் பவனி.
    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கண்ணாடி சப்பரத்தில் பவனி.
    * தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அம்மன் வீதி உலா.
    * கீழ்நோக்கு நாள்.



    30-ந்தேதி (சனி) :

    * விஜயதசமி.
    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா பெருவிழா.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி.
    * கன்னியாகுமரி பகவதி அம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளிய காட்சி.
    * மேல்நோக்கு நாள்.

    1-ந்தேதி (ஞாயிறு) :

    * முகரம் பண்டிகை.
    * முகூர்த்த நாள்.
    * சர்வ ஏகாதசி.
    * சகல விஷ்ணு ஆலயங்களிலும் பெருமாள் கருட சேவை.
    * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் ஆகிய கோவில்களில் ரத உற்சவம்.
    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்தில் பாலாபிஷேகம்.
    * மேல்நோக்கு நாள்.

    2-ந்தேதி (திங்கள்) :

    * காந்தி ஜெயந்தி.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * மேல்நோக்கு நாள்.
    Next Story
    ×