search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (25.4.2017 முதல் 1.5.2017 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (25.4.2017 முதல் 1.5.2017 வரை)

    25.4.2017 முதல் 1.5.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    25-ந்தேதி (செவ்வாய்) :

    *  போதாயன அமாவாசை.
    *  ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோவில் ரத உற்சவம்.
    *  வண்டியூர் மாரியம்மன் கோவில் ரத ஊர்வலம்.
    *  ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
    *  சமநோக்கு நாள்.

    26-ந்தேதி (புதன்) :


    * அமாவாசை.
    * சென்னை சென்னகேசவப் பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்களில் விடையாற்று உற்சவம்.
    * திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
    * வண்டியூர் மாரியம்மன் கோவில் தீர்த்தவாரி.
    * சமநோக்கு நாள்.

    27-ந்தேதி (வியாழன்) :


    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி காவிலில் சீராளக் கறி நைவேத்தியம்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் கோவிலில் புஷ்பாங்கி சேவை.
    * திருப்போரூர் முருகப்பெருமான் கோவிலில் அபிஷேகம்.
    * செம்பனார் கோவிலில் சூர்ணாபுரீஸ்வரர் பவனி வருதல்.
    * வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.



    28-ந்தேதி (வெள்ளி) :

    * கார்த்திகை விரதம்.
    * ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    * மதுரை மீனாட்சி சொக்க நாதர் சித்திரை பெருவிழா தொடக்கம், சுவாமி- அம்பாள் கற்பக விருட்ச, சிம்ம வாகனத்தில் வீதி உலா.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பவனி.
    * வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    29-ந்தேதி (சனி) :

    *  அட்சய திருதியை.
    *  சதுர்த்தி விரதம்.
    *  நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் உற்சவம் தொடக்கம்.
    * நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பூத, அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
    * தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    * மேல்நோக்கு நாள்.


    30-ந்தேதி (ஞாயிறு) :

    *  முகூர்த்த நாள்.
    * பாளை திரிபுராந்தீஸ்வரர் கோவில் உற்சவம் தொடக்கம்.
    * உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி பூத வாகனத்தில் வீதி உலா.
    * 789முகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் அன்ன வாகனத்தில் பவனி.
    * மதுரை மீனாட்சி சொக்க நாதர் கயிலாய, காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
    * திருச்சி தாயுமானவர் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.
    * சமநோக்கு நாள்.

    1-ந்தேதி (திங்கள்) :

    * உழைப்பாளர் தினம்.
    *  சஷ்டி விரதம்.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தங்கப் பல்லக்கு உற்சவம்.
    * தூத்துக்குடி பாகம்பிரியாள், திருஞானசம்பந்தருக்கு ஞானப்பாடல் ஊட்டும் நிகழ்ச்சி.
    * திருக்கடவூர் சிவபெருமான் திருக்கல்யாணம்.
    *  மேல்நோக்கு நாள்.
    Next Story
    ×