search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (18-4-2017 முதல் 24-4-2017 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (18-4-2017 முதல் 24-4-2017 வரை)

    18-4-2017 முதல் 24-4-2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    18-ந் தேதி (செவ்வாய்)

    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் ரத உற்சவம்.

    * சமயபுரம் மாரியம்மன் கோவில் ரதோற்சவம்.

    * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    19-ந் தேதி (புதன்)

    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பவனி.

    * வண்டியூர் மாரியம்மன் புறப்பாடு.

    * சென்னை சென்ன கேசவப் பெருமாள் காலை யாழி வாகனத்திலும், மாலை தங்கக் குதிரை வாகனத்திலும் திருவீதி உலா.

    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.

    * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    20-ந் தேதி (வியாழன்)

    * சிரவண விரதம்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.

    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கருட சேவை.

    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆடும் பல்லக்கிலும், இரவு கண்ணாடி பல்லக்கிலும் பவனி.

    * வண்டியூர் மாரியம்மன் விருட்ச சேவை.

    * சென்னை சென்ன கேசவப் பெருமாள் தங்கப் பல்லக்கிலும், புண்ணிய கோடி விமானத்திலும் புறப்பாடு கண்டருளல்.

    * செம்பனூர் கோவில் சூர்ணபுரீஸ்வரர் உற்சவம் ஆரம்பம்.

    * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    21-ந் தேதி (வெள்ளி)

    * முகூர்த்த நாள்.

    * சென்னை சென்ன கேசவப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் பவனி.

    * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி நான்கு கருட சேவை.

    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் சப்தாவரணம்.

    * வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு.

    * வண்டியூர் மாரியம்மன் பவனி.

    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    22-ந் தேதி (சனி)

    * சர்வ ஏகாதசி.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் திருவிளையாடல்.

    * செம்பனூர் கோவில் பூர்ணபுரீஸ்வரர் புறப்பாடு.

    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகை எழுந்தருளல்.

    * சென்னை சென்ன கேசவப்பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்சவம்.

    * மேல்நோக்கு நாள்.

    23-ந் தேதி (ஞாயிறு)

    * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு கண்டருளல்.

    * வீரபாண்டி கவுமாரியம்மன் கருட வாகனத்தில் திருவீதி உலா.

    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் விடையாற்று உற்சவம்.

    * கீழ்நோக்கு நாள்.

    24-ந் தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * பிரதோஷம்.

    * மாத சிவராத்திரி.

    * திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    * சென்னை சென்ன கேசவப் பெருமாள் விடையாற்று உற்சவம்.

    * வண்டியூர் மாரியம்மன் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.
    Next Story
    ×