search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (11.4.2017 முதல் 17.4.2017 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (11.4.2017 முதல் 17.4.2017 வரை)

    11.4.2017 முதல் 17.4.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    11-ந்தேதி (செவ்வாய்) :

    * திருநெல்வேலி வீரராகவபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் சித்திரை உற்சவம் ஆரம்பம்.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் விடையாற்று உற்சவம்.
    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலமாய் காட்சியருளல்.
    * குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு.
    * சமயபுரம் மாரியம்மன் பூத வாகனத்தில் திருவீதி உலா.
    * சமநோக்கு நாள்.

    12-ந்தேதி (புதன்) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் வருசாபிஷேகம்.
    * திருநெல்வேலி டவுண் லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவிலில் எண்ணெய்க் காப்பு உற்சவம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    * சமயபுரம் மாரியம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா.
    * சமநோக்கு நாள்.

    13-ந்தேதி (வியாழன்) :

    * சென்னை சென்ன கேசவப்பெருமாள் காலை அம்ச வாகனத்திலும், மாலை சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் சேஷ வாகனத்தில் புறப்பாடு.
    * சென்னை மல்லீஸ்வரர் ஆலயத்தில் விடையாற்று உற்சவம்.
    * சமயபுரம் மாரியம்மன் விருட்ச வாகனத்தில் பவனி.


    * சமநோக்கு நாள்.

    14-ந்தேதி (வெள்ளி) :

    * தமிழ் வருடப் பிறப்பு
    * புனித வெள்ளி.
    * சங்கடஹர சதுர்த்தி.
    * திருச்செந்தூர் சுப்பிர மணியர் கோவிலில் சண்முகர் அன்னாபிஷேகம்.
    * சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்.
    * சென்னை சென்ன கேசவப்பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் களில் கருட வாகனம்.
    * கீழ்நோக்கு நாள்.

    15-ந்தேதி (சனி) :

    * திருமலை திருப்பதியில் திருப்படி விழா.
    * சென்னை சென்ன கேசவப்பெருமாள் காலை சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இரவு சந்திர பிரபை வாகனத்தில் பவனி.
    * பாபநாசம் சிவபெருமான் வெள்ளி விருட்ச சேவை.
    * சமயபுரம் மாரியம்மன் அம்ச வாகனத்தில் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.



    16-ந்தேதி (ஞாயிறு) :

    * ஈஸ்டர்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * சென்னை சென்னகேச வப்பெருமாள், இரவு நாச்சியார் திருக்கோலமாய் தங்கப் பல்லக்கில் பவனி.
    * சமயபுரம் மாரியம்மன் மரக் குதிரையில் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.

    17-ந் தேதி (திங்கள்) :

    * முகூர்த்த நாள்.
    * மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    * சென்னை சென்னகேசவப்பெருமாள் காலை தங்க தொட்டியில் சூர்ணாபிஷேகம்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இரவு யானை வாகனத்தில் புண்ணியகோடி விமான சேவை.
    * சமயபுரம் மாரியம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடு.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * கீழ்நோக்கு நாள்.
    Next Story
    ×