search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (3.1.2017 முதல் 9.1.2017 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (3.1.2017 முதல் 9.1.2017 வரை)

    3.1.2017 முதல் 9.1.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    3-ந்தேதி (செவ்வாய்) :

    * சிதம்பரம் சிவபெருமான் சந்திர பிரபையிலும், இரவு அன்ன வாகனத்திலும் புறப்பாடு.
    * ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர் முதலமைச்சர் திருக்கோலமாய் காட்சியளித்தல், இரவு பூத வாகனத்தில் திருவீதி உலா.
    * சங்கரநயினார் கோவில் சிவபெருமான் தங்கப் பல்லக்கில் பவனி.
    * வீரவநல்லூர் சுவாமி கற்பக வாகனத்திலும், அம்மன் கமல வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
    * மேல்நோக்கு நாள்.

    4-ந்தேதி (புதன்) :

    * சஷ்டி விரதம்.
    * திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் திரிபுர சம்ஹார லீலை, இரவு கயிலாய பர்வத வாகனத்தில் வீதி உலா.
    * சிதம்பரம் சிவபெருமான் தங்க சூரிய பிரபையில் புறப்பாடு.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் ஆகிய தலங்களில் திருமொழி திருநாள் உற்சவம்.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்ச லீலை.
    * கீழ்நோக்கு நாள்.

    5-ந்தேதி (வியாழன்) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா.
    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் காலை வெள்ளி சீவிகையில் பவனி. மாலையில் சிவபூஜை செய்தருளிய காட்சி.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருமோகூர் காளமேகப் பெருமாள் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவம்.
    * திருக்குற்றாலம் சிவபெருமான் விருட்ச வாகனத்தில் திருவீதிஉலா.
    * மேல்நோக்கு நாள்.

    6-ந்தேதி (வெள்ளி) :

    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் ஊர்த்துவ தாண்டவ காட்சி, இரவு வெள்ளி யானை வாகனத்தில் பவனி.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், அமிர்த மோகினி திருக்கோலமாய் காட்சியருளல்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், மதுரை கூடலழகர் ஆகிய தலங் களில் திருமொழி திருநாள் உற்சவம்.
    * வீரவநல்லூர் சிவபெருமான் காலை விருட்ச வாகனத்திலும், இரவு இந்திர விமானத்திலும் வீதி உலா.
    * சமநோக்கு நாள்.

    7-ந்தேதி (சனி) :

    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதியில் எண்ணெய் காப்பு உற்சவம்.
    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் காலை ருத்திராட்ச விமானத்தில், பிட்டுக்கு மண் சுமந்த காட்சி.
    * காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவம்.
    * திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.
    * சமநோக்கு நாள்.

    8-ந்தேதி (ஞாயிறு) :

    * வைகுண்ட ஏகாதசி.
    * சகல விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் திறப்பு விழா.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு முத்தங்கி சேவை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார், காலை கள்ளர் திருக்கோலமாய் காட்சி தருதல், இரவு சந்திர பிரபையில் பவனி.
    * கீழ்நோக்கு நாள்.

    9-ந்தேதி (திங்கள்) :

    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், கண்ணன் திருக்கோலமாய் காட்சி அருளல், மாலை தங்கபரங்கி நாற்காலியில் புறப்பாடு.
    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் ரத உற்சவம்.
    * சிதம்பரம் சிவபெருமான் தங்க ரதத்தில் புறப்பாடு கண்டருளல்.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.
    Next Story
    ×