search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (6.12.2016 முதல் 12.12.2016 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (6.12.2016 முதல் 12.12.2016 வரை)

    6–12–2016 முதல் 12–12–2016 வரை வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    6–ந்தேதி (செவ்வாய்) :

    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காலை சேஷ வாகனத்திலும், அம்பாள் இரவு காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
    * மேல்நோக்கு நாள்.

    7–ந் தேதி (புதன்) :

    * சுவாமிமலை முருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி.
    * மேல்நோக்கு நாள்.

    8–ந் தேதி (வியாழன்) :

    * சுவாமிமலை முருகப்பெருமான் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா.
    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி–அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில், அறுபத்தி மூவருடன் பவனி, இரவு சுவாமி வெள்ளி ரதத்திலும், அம்பாள் இந்திர வெள்ளி விமானத்திலும் புறப்பாடு.
    * மேல்நோக்கு நாள்.

    9–ந் தேதி (வெள்ளி) :


    * முகூர்த்த நாள்.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் திருவீதி உலா.
    * பழனி பாலதண்டாயுதபாணி புறப்பாடு கண்டருளல்.
    * வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்.
    * திருவண்ணாமலை அண்ணாமலை சுவாமி ரத உற்சவம்.
    * சமநோக்கு நாள்.

    10–ந் தேதி (சனி) :


    * சர்வ ஏகாதசி.
    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் வெள்ளி விமானத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் திருவீதி உலா.
    * சுவாமிமலை முருகப் பெருமான் காமதேனு வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.

    11–ந் தேதி (ஞாயிறு) :

    * பிரதோஷம்.
    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கண்ணாடி விமானத்தில் பவனி. இரவு சுவாமி கயிலாய வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பட்டாபிஷேகம், தங்க குதிரையில் சுவாமி வீதி உலா.
    * கீழ்நோக்கு நாள்.

    12–ந் தேதி (திங்கள்) :

    * திருக்கார்த்திகை தீபம்.
    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் தங்க விமானத்தில் பவனி. சுவாமி ஜோதி ரூபமாய் மலைமேல் தரிசனம்.
    * சுவாமிமலை, திருப்பரங்குன்றம் தலங்களில் முருகப்பெருமான் ரத உற்சவம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் 108 சங்காபிஷேகம், 1008 கலசாபிஷேகம்.
    * கீழ்நோக்கு நாள்.
    Next Story
    ×