search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (1-11-2016 முதல் 7-11-2016 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (1-11-2016 முதல் 7-11-2016 வரை)

    1-11-2016 முதல் 7-11-2016 வரை நடக்க இருக்கும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை கீழே விரிவாக பார்க்கலாம்.
    1-ந் தேதி (செவ்வாய்) :

    * சிக்கல் சிங்கார வேலவர் நாகாபரண காட்சி, இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா.
    * குமாரவயலூர் முருகப் பெருமான் சேஷ வாகனத்தில் பவனி.
    * திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி புறப்பாடு கண்டருளல்.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திர சேகரர் புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    2-ந் தேதி (புதன்) :

    * முகூர்த்த நாள்.
    * திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேய சுவாமி கோவில் வருசாபிஷேகம்.
    * திருச்செந்தூர் முருகப் பெருமான் பவனி.
    * சிக்கல் சிங்கார வேலவர் காலை மோகன அவதாரம், இரவு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.
    * திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * குமாரவயலூர் முருகப் பெருமான் விருட்ச வாகனத்தில் பவனி.
    * சமநோக்கு நாள்.

    3-ந் தேதி (வியாழன்) :

    * சதுர்த்தி விரதம்.
    * குமாரவயலூர் முருகப் பெருமான் கஜமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல், அன்ன வாகனத்தில் பவனி வருதல்.
    * சிக்கல் சிங்கார வேலவர் வேணுகோபாலன் திருக்கோலம், இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திர சேகரர் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.

    4-ந் தேதி (வெள்ளி) :

    * முகூர்த்த நாள்.
    * சிக்கல் சிங்கார வேலவர் கோவில் ரத உற்சவம், இரவு உமாதேவியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி.
    * குமாரவயலூர் முருகப் பெருமான் சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    5-ந் தேதி (சனி) :

    * கந்தசஷ்டி, சூரசம்ஹாரம்.
    * சகல முருகன் கோவில் களிலும் சூரசம்ஹார நிகழ்வு.
    * சிக்கல் சிங்கார வேலவர் தங்க ஆட்டுக்கிடா வாகனத்தில் சூர வதம் செய்து, இந்திர விமானத்தில் காட்சியளித்தல்.
    * திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    6-ந் தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * சகல முருகன் கோவில் களிலும் தெய்வானை திருக்கல்யாண உற்சவம்.
    * சிக்கல் சிங்கார வேலவர் மாலை தங்க குதிரையில் பவனி, இரவு தெய்வானையை மணந்து வெள்ளி ரதக் காட்சி.
    * குமாரவயலூர் முருகப் பெருமான் திருக்கல்யாண உற்சவம்.
    * திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி, திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.
    * மேல்நோக்கு நாள்.

    7-ந் தேதி (திங்கள்) :

    * முகூர்த்த நாள்.
    * சிக்கல் சிங்கார வேலவர் வள்ளி- தெய்வானையை மணந்து இந்திர விமானத்தில் காட்சியருளல்.
    * மாயவரம் கவுரிமாயூர நாதர் படிச் சட்ட பவனி.
    * மேல்நோக்கு நாள்.
    Next Story
    ×